• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-16 15:41:48    
இங்கிலாந்து ஓபன் பூப்பந்து

cri

உலகத் தரவரிசையில் ஆடவர் மற்றும் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தின் முதலிடத்தில் உள்ள சீனாவின் லின் டான் மற்றும் சியே சிங்ஃபாங் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இங்கிலாந்து ஓபன் சாம்பியன் போட்டிகளை வென்றுள்ளனர்.

 இருவரும் காதலர்கள், இருவரும் தங்களது நாட்டின் பெருமையை உலகறியச் செய்துகொண்டிருப்பவர்கள். லின் டானுக்கு இந்த வெற்றி கடந்த 4 ஆண்டுகளிலான மூன்றாவது இங்கிலாந்து ஓபன் போட்டி வெற்றியாகும். இறுதியாட்டத்தில் சீனாவின் சக ஆட்டக்காரர் சென் யூவை நேர் செட்களில் வெற்றி பெற்றார் லின் டான்.

அவரது காதலியும், ஒற்றையர் ஆட்ட உலகத்தரவரிசையில் முதலிடத்தில் நிற்பவருமான சியே சிங்ஃபாங் சீனாவில் வளர்ந்து தற்போது பிரான்ஸ் நாட்டுக்கென விளையாடும் பி ஹொங்யாங்கை நேர் செட்களில் வென்று இங்கிலாந்து ஓபன் சாம்பியன் பட்டம் வென்றார். இது தவிர பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவிலும் சீன அணியினர் வெற்றி பெற்றனர். ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் சீன இணையை வென்ற மலேசிய இணை இங்கிலாந்து ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றது.