• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-16 16:04:34    
பெண்கள் கால்பந்து உலகக் கோப்பை

cri

பெண்கள் கால்பந்து உலகக் கோப்பை இவ்வாண்டு செப்டம்பர் 10ம் நாள் முதல் 30ம் நாள் வரை சீனாவில் நடைபெறவுள்ளது. ஷாங்காய், தியஞின், ஹாங்சோ, வூஹான், செங்து ஆகிய நகரங்களில் 2007ம் ஆண்டு பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும். இப்போட்டிகளின் துவக்க விழா, நிறைவு விழா மற்றும் உலகக் கோப்பையின் இறுதியாட்டம் ஆகியவை ஷாங்காயில் நடைபெறும். சொந்த மண்ணில், பரிச்சயமான முகங்களின் ஆராவாரமான ஆதரவில் இந்த முறை உலகக் கோப்பை வென்றெடுப்பதில் கூடுதல் கவனமும், நம்பிக்கையும் கொண்டுள்ளது சீன அணி.

 இறுதிச் சுற்றில் தேர்வாகும் நான்கு அணிகளில் ஒன்றாக நிச்சயம் இருக்கவேண்டும் என்பதே சீனாவின் குறைந்தபட்ச எதிர்ப்பு. அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் போனால் ரசிகப் பெருமக்களின் அதிருப்திக்கு ஆளாகும் நிலையேற்படும் என்பது இதற்கு ஒரு காரணம். அண்மைக்காலமாக பெண்கள் கால்பந்து போட்டிகள் ஆடவருக்கு இணையாக பரபரப்ப்பாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளமை நிச்சயம் ரசிகர்களை இவ்விளையாட்டு நடைபெறும் அரங்குகளுக்கு அணிதிரளச்செய்யும் என்று நம்பப்படுகிறது. 1999 பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சீனா இறுதியாட்டம் வரை முன்னேறி, அமெரிக்க அணியிடம் தோல்வி கண்டு இரண்டாம் இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.