• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-19 14:14:16    
இணைய பழக்க அடிமைத்தனம்

cri

அல்லது கொலை கொலையா முந்திரிக்கா நரிய நரிய சுத்திவா, கொள்ளையடிச்சவ எங்கிருக்கா கூட்டத்தில் இருக்கா கண்டுபிடி என்று "சின்னப்புள்ளத்தனமா விளையாடவேணாம்ல". இந்த தொனியில்தான் இன்றைக்குள்ள பதின்பருவத்தினரின் சிந்தனையும், கேள்விகளும் அமைகின்றன.

அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை, நாம் சிறு வயதினராய் இருந்தபோதும் கூட பெரியோர்கள் ஏதாவது சொன்னால் நாம் நன்றாக தலையாட்டிவிட்டு, பெருசுக்கு வேற வேலையில்லை என்றுதான் சொல்லியிருப்போம். ஆக, அவசரமாகிப்போன தற்போதைய விளையாட்டில் எல்லாமே கணிணிமயமாகிய சூழலில் இளம் வயதினரின் மனம் கணிணியிலேயே சிறைப்பட்டிருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வீடியோ கேம்ஸ் என்று உலவிய, தொலைக்காட்சியில் இணைப்பு ஏற்படுத்தி விளையாடும் விளையாட்டுகளின் பரிணாம வளர்ச்சியாக இணைய விளையாட்டுகள் அமைந்துள்ளன. ஆனால் இன்றைக்கு உலகில் பெரிதும் எழுந்துள்ள கரிசனை, இந்த இணைய விளையாட்டுகள், ஏன் இணைய பயன்பாடுமே கூட மது, போதைப்பொருள் போல மாறி மக்களை அதற்கு அடிமைப்படுத்திவிட்டதோ என்பதுதான். ஒரு சாரார் போதை பழக்கம் போல் இதை பார்க்க தற்போதைக்கு தயங்குகின்றனர் ஆனால் மறு சாரார் ஏற்கனவே இந்த இணைய போதை பழக்கத்தின் விளைவுகளை, பாதிப்புகளை கண்டபின் அதற்கான சிகிச்சை நகர்வையும் மேற்கொண்டுள்ளனர்.

கற்றாடின்னு சொன்னீங்க, பம்பரம் விட்டீங்க, கொலை கொலையா முந்திரிக்கான்னு சொன்னீங்க இப்போ என்னடான்னா போதைப்பழக்கம்னு சொல்றீங்க, திருச்சியிலிருந்து எழும் குரல் எமக்கு கேட்கிறது. புதுவைக்காரருக்கும் நீலகிரியாருக்கும் இதே கேள்வி எழுந்திருக்கக் கூடும். சரி...

2006ம் ஆண்டின் இறுதியிலான ஒரு புள்ளி விபரத்தின்படி, சீனாவில் 137 மில்லியன் இணையப் பயன்பாட்டாளர்கள் இருப்பதாக அறியப்படுகிறது. அதாவது 13 கோடியே 70 லட்சம். இதில் 18 வயதுக்கு குறைவானவர்களின் எண்ணிக்கையில் 2.3 மில்லியன் பேர் அதாவது 13 விழுக்காடினர் இணைய போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களாக மதிப்பிடப்படுகிறது. சீன தேசிய குழந்தைகள் மையம் நடத்திய ஒரு ஆய்வு இதை கூறுகிறது. மேற்கத்திய நாடுகள் இந்த இணைய போதை பழக்கம் என்பதையோ அதற்கு அடிமையாதல் என்பதையோ ஒரே அளவுகோளால் அணுகவில்லை. இப்படியான ஒரு போதை பழக்கம் என்பது உள்ளதா அல்லது எதெல்லாம் இருந்தால் அது இணைய போதை பழக்கம் என்று அழைக்கப்படலாம் என்பது பற்றிய ஒரு தெளிவு மேற்கத்தியவர்கலிடையே தற்போதைக்கு திடமாக இல்லை. ஆனால் சீனாவில் இந்தக் கதை வேறு விதம்.

ஸ்டான்போர்ட் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 2006ம் ஆண்டிலான ஒரு ஆய்வு, வயதுக்கு வந்தோரில் 8 பேரில் ஒருவர், இணைய வசதிகள் இல்லாமல் சில நாட்கள் இருப்பதை மிகக்கடினமான ஒன்றாக கருதுவதாக கண்டறிந்துள்ளது. அதிகப்பாடியான இணையப்பயன்பாடு இணைய போதை என்று பொருள்படுமா என்பதை இந்த ஆய்வு குறிப்பிடவில்லை.

மறுபுறம் சீனாவில் மதுபோதை, சூதாட்டம், போதைப்பொருள் அடிமைத்தனம் இவற்றோடு இணைய போதையையும் ஒரே தராசில் பார்க்க சீன மருத்துவ வட்டாரத்தினர் சிறிதும் தயங்கவில்லை. போதை பழக்கத்துக்கு அடிமையாவோர் அந்த போதையை பெறுவதற்காக எதையும் செய்ய தயங்குவதில்லை. இணைய போதைக்கு அடிமைப்பட்ட சிறார்களும் அப்படித்தான். சிலர் பள்ளிகளை இடைநிறுத்துகின்றனர், சிலர் பணத்துக்காக மக்களை தாக்குகின்றனர், சிலர் வீட்டில் பொருட்களை திருடி இந்த இணைய விளையாட்டுக்களை தொடர்ந்து விளையாடுகின்றனர். இந்த இணைய போதைக்கும் மற்ற போதை பழக்கத்துக்கு அடிமைப்படுதலுக்கும் வேறுபாடுகள் பெரிதாக ஒன்றுமில்லை என்று விளக்குகிறார் தாவ் ரென் என்பவர். யாரிந்த தாவ் ரென் என்பதை சொன்னால் அவர் சொல்வதும், இதோ இந்த நிகழ்ச்சியில் நான் சொல்வதும் உங்களுக்கு நன்றாகவே புரியும்.

பெய்சிங் மாநகரின் தாசிங் என்ற வட்டத்தில் உள்ள மையத்தின் இயக்குனர்தான் அந்த தாவ் ரென். ராணுவ பயிற்சி முகாமை ஒத்த பரிவும், பண்பான ஒழுக்கமான நடவடிக்கையையும் வலியுறுத்து விதமாக அமையும் இந்த அமையும் இந்த ராணுவ பாணி பயிற்சி முகாம், சீனாவின் இணைய போதை பழக்கத்தை எதிர்த்த போர்க்களமாக அமைந்துள்ளது என்றே சொல்லவேண்டும். இந்த பயிற்சி முகாம் அமைந்துள்ள மையத்தின் பெயர் இணைய போதை பழக்க சிகிச்சை மையம். ராணுவ ரீதியிலான உடற் பயிற்சி உள்ளிட்ட தீவிரமான பயிற்சிகளும், சிகிச்சையளிப்புமாக இணைந்து அமைந்துள்ளது இந்த மையத்தின் பயிற்சி முகாம். இணைய விளையாட்டு, இணையத்தில் பாலியல் ரீதியிலான வலைமனைகளில் மூழ்கிக்கிடந்தோர், சாட் எனப்படும் இணைய அரட்டையை நாளந்த நடவடிக்கையாக்கி அதை இழக்க மனமில்லாதோர் என இணையத்தின் பலவகை அம்சங்கள் பழகி அதை கைவிட முடியாமல் தங்கள் இயல்பு வாழ்கை மாறி துன்பப்படுவோர் அல்லது மற்றவருக்கு தீங்கிழைப்பவராக மாறியோர் இந்த பயிற்சி முகாமின் பரிவும், கண்டிப்பும் கலந்த பயிற்சியின் மூலம் சிகிச்சையளிக்கப்படுகின்றனர். அரசின் நிதியுதவியுடன், பெய்சிங் ராணுவ மருத்துவமனையைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவரால் வழைநடத்தப்படும் இந்த மையத்தின் பயிற்சி முகாமின் சிறப்பான சிகிச்சையளிப்பால் பல இளம் வயதினர் தங்கள் இணைய போதை அடிமைத்தனம் நீங்கியுள்ளனர். இந்த மையத்தின் சிகிச்சையளிப்பு வெற்றி 2004ம் ஆண்டில் துவங்ப்பட்டதிலிருந்து 70 விழுக்காடாக அமிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


1 2