• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-19 14:43:16    
சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் பெண்கள் விருது

cri

சர்வதேச பெண்கள் தினமான கடந்த வியாழனன்று சர்வதேச ஒலிம்பிக் குழுமம் 6 பெண்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கியது. பெண்களும் விளையாட்டும் என்ற விருதுக் கேடயம் இந்த 6 பெண்களுக்கும் ஸ்விடசர்லாந்து நாட்டின் லௌசேன் நகரில் நடைபெற்ற சிறப்பு விழாவில் வழங்கப்பட்டது. இதில் உலக அளவிலான பெண்களும் விளையாட்டும் என்ற விருதுக் கேடயம், ஜமைக்கா நாட்டு தலைமையமைச்சர் போர்சியா சிம்ப்சன் மில்லர் அம்மையாருக்கு வழங்கப்பட்டது. ஜமைக்கா நாட்டின் விளையாட்டுத்துறையில், விளையாட்டு வீராங்கனைகளாகவும், அதிகாரிகளாகவும் பங்கேற்க பெண்களை உற்சாகப்படுத்து ஊக்கமளித்தமைக்காக மில்லர் அம்மையாருக்கு சர்வதேச ஒலிம்பிக் குழுமம் இந்த சிறப்பு விருதை அடையாளப்படுத்தும் கேடயத்தை வழங்கியது. இது தவிர கண்டங்கள் அளவில் 5 பெண்களுக்கு இந்த பெண்களும் விளையாட்டும் என்ற விருது வழங்கப்பட்டது. கென்யாவின் தேசிய ஒலிம்பிக் குழுவின் பொருளாலளர் ஃபிரீடா பில்ஹா ஷிரோயா, அமெரிக்காவைச் சேர்ந்த 6 முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற வீராங்கனை ஜாக்கி ஜாய்னர் கேர்சி, பாலஸ்தீனத்தில் பெண்களுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக் கல்வியை ஏற்படுத்திய நைலா ஷதாரா கரூப், சர்வதேச தடகளக் கூட்டமைப்பபைச் சேர்ந்த ஜெர்மன் நாட்டு இல்சே பெக்தோல்ட், பாப்புவா நியு கினியா நாட்டின் தேசிய ஒலிம்பிக் குழுவின் துணைத்தலைவர் வெட்டு அபானா தீரோ ஆகிய பெண்மணிகளும் இவ்வாண்டின் சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் பெண்களும் விளையாட்டும் என்ற சிறப்பு விருதை பெற்றனர்.