பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்பு நடவடிக்கை
cri
 2008 பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் அங்கமாக பெய்சிங் மாநகராட்சி உலங்கு வானூர்தி, ஹெலிகாப்டர் காவல் அணியை உருவாக்கியுள்ளது. இவ்வாண்டின் இரண்டாம் அரையாண்டில் உலங்கு வானூர்திகள் தருவிக்கப்பட்டபின், இதை ஓட்டவுள்ள விமானிகள் பயிற்சிகளில் இறங்குவர். வான் கண்காணிப்பு அமைப்புமுறையை உருவாக்கும் திட்டத்தில் இந்த உலங்கு வானூர்தி காவல் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுக்களின் போதான கண்காணிப்பு பாதுகாப்பு பணிகளுக்கு பின்பாக இந்த உலங்கு வானூர்திகள் பெய்சிங் மாநகரின் பாதுகாப்புக்கு உதவியளிக்க பயன்படுத்தப்படும். இவ்வாண்டின் இறுதியில் ஒலிம்பிக் அரங்குகள், பயிற்சிக்களங்கள் மற்றும் இதர வசதிகளிலான பாதுகாப்புத் தொடர்பாண திட்டப்பணிகள் நிரைவேற்றப்பட்டு, பின் பல்வேறு சோதனைகள். பயிற்சிகள் நடத்தப்படும்.
|
|