• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-20 15:49:48    
அரசியல் கலந்தாய்வு மாநாடு பற்றிய நேயர்களின் கருத்துகள்

cri

சீன தேசிய மக்கள் பேரவையின் கூட்டத்தொடர் பற்றி பாண்டிச்சேரி என்.பாலகுமார் தெரிவிக்கும் கருத்துகள் இன்றைய கூட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தது. சென்ற ஆண்டில் கல்வி வரி நீக்கம் போன்றவை மூலம் நாட்டின் வலிமை சேர்க்கும் சட்டம் நடைமுறை படுத்தப்பட்டது. இந்த ஆண்டில் பொருள் உரிமை பற்றிய வரைவுச் சட்டம், தொழில் நிறுவனங்களின் வருமான வரி பற்றிய வரைவுச் சட்டம், புதிய சீனத் தேசிய மக்கள் பேரவை பிரதிநிதிகளின் எண்ணிக்கை மற்றும் தேர்தல் பிரச்சினை பற்றிய வரைவுத் தீர்மானம் போன்றவை அடங்கும்.
இதில் முதலாவதாக, தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் துணைத் தலைவர் திரு.வாங் சாவ் கோ அவர்கள், இச்சட்ட வரைவு குறித்து விளக்கம் அளித்த போது, சீனாவின் தனிச்சிறப்புடைய சட்ட அமைப்பு முறையில், முதுகெலும்பு பங்காற்றக் கூடிய, இன்றியமையாத முக்கிய சட்டம் இதுவாகும் என்று கூறினார். மேலும், தனியாரின் சட்டபூர்வமான வருமானம், வீடு, அன்றாட வாழ்க்கைப் பயன்பாட்டுப் பொருட்கள், வங்கிச் சேமிப்பு, முதலீடு, வருவாய் ஆகியவை பாதுகாக்கப்படும். தனியாரின் சட்டப்படியான சொத்துகளை எந்தப் பிரிவும் தனிநபரும் கைப்பற்றவும் கொள்ளையடிக்கவும் சீர்குலைக்கவும் தடை விதிக்கப்படுகின்றது. இந்த விதிகள் வகுக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் பற்றியும் அதன் செல்வாக்கு பற்றியும் விளக்கமாக கூறினார். இதன் மூலம் சீனாவின் தனித்தன்மையை உலகத்திற்கு எடுத்துகாட்டியது போல இருந்தது.


நாட்டின் வருவாயை பெருக்கவும், புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தவும், சீனாவிலுள்ள உள்நாட்டு மற்றும் அந்நிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் மீதான வருமான வரி விகிதத்தைச் சமப்படுத்த இவ்வரைவுச் சட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவும் பயன் அளிக்கக்கூடிய வரைவு சட்டம் இருக்கும் என்று நம்புகிறேன். தொழில் துறையில் வேகமாக முன்னோறி வரும் சீனாவில், தொழில் நிறுவனங்கள் மீதான வருமான வரி இன்றியமையாதது. தொழில் நிறுவனங்களை பாதிக்காத வகையில் சட்டம் நடைமுறை படுத்தப்பட வேண்டும் என்பதை என்பதே விருப்பம்.
சீன மக்களின் வாழ்க்கை தரம் உயரவும், முன்னோடியாக விளங்கவும் இதுபோன்ற சட்டங்கள், விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
காங்கேய‌ம் பி.ந‌ந்த‌குமார்
சீன‌ மக்கள் அர‌சியல் க‌ல‌ந்தாய்வு மாநாட்டின் 10வது தேசிய கமிட்டியின் 5வது கூட்டத் தொடர் 3.3.2007 அன்று பெய்ஜிங்கில் தொட‌ங்கியது. இதில் 2100 உறுப்பின‌ர்கள் கூடினார்கள். இந்த மாநாடு மிக விம‌ரிசையாக ந‌டைபெற்றது. இந்த மாநாடு 2007ம் ஆண்டு அறிவியல் பூர்வ‌மான வ‌ள‌ர்ச்சியை மேற்கொள்ளும் என்ற பல த‌க‌வ‌ல்களை அன்றைய செய்திதொகுப்பு வாயிலாய் அறிந்தேன்.
இந்த‌ இரு கூட்டத் தொட‌ர்க‌ளும் வெற்றிக‌ர‌மாக ந‌ட‌ந்து முடிய‌ எனது ந‌ல்வாழ்த்துக்க‌ளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருச்சி அண்ணா நகர் வி.டி.இரவிச்சந்திரன் நடைபெற்ற சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத் தொடர் குறித்து.
இந்தாண்டும் சென்ற ஆண்டுபோல் விவசாயிகளின் நலன், வருமானம் ஆகியவற்றில் முக்கியமாக கவனம் செலுத்துவது இடம் பெற்றுள்ளது. இது மெல்ல மெல்லத்தான் நிறைவேற்றப்பட முடியும். இருப்பினும் விவசாயிகளின் நலன் தொடர்ந்து கருத்தில் கொள்ளப்படுவதை ஒவ்வொரு கூட்டத்தொடரும் தெளிவுபடுத்துகிறது. அடுத்ததாக பொருளாதார வளர்ச்சி வேகம் என்பது நடப்பு ஆண்டில் 8 % என்ற இலக்கை சீனா கொண்டுள்ளது. சோசலிசத்தை கடைபிடிப்பது என்பது அத்தனை எளிதானதல்ல என்று அரசுத் தலைவர் கூறியுள்ளார். உண்மைதான். ஜனநாயக ஆட்சி என்பது கயிற்றில் நடப்பது போன்றது, கம்யூனிச ஆட்சி என்பது கத்தியின் மேல் நடப்பது போன்றது. இருப்பினும் இந்த கம்யூனிச ஆட்சி இல்லையென்றால், ஒருங்கிணைந்த சீனாவை வரைபடத்தில் பார்த்திருக்க முடியாது.

அடுத்து பணவீக்கம் என்பது, என்னைப் பொருத்தவரை சீனாவிற்கு மிகவும் எளிதாக கையாளக் கூடிய விடயம். இதனை கட்டுப்படுத்துவதை மிக மிக சுலபமாக சீனா செய்து முடித்திடும். காரணம் நுகர்வு அதிகமாவதும். விலைவாசி என்பது தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருப்பதுமே. விடயம் தெரிந்தவர்களுக்கு தெளிவாக புரியும். இணக்கச் சமூகத்தை முழுமையாக உருவாக்கிடும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கனவும் நனவாகிடும் தூரம் அதிகமில்லை என்பது என் கணிப்பு. இலக்கு ஒன்றே இலட்சியமாக இருக்கும் வரை அந்த இலக்கு வெகுவிரைவில் எட்டிப்பிடிக்கப்படும்.
...... மதுரை -20 என்.இராமசாமி,
கவனத்தை ஈர்கும் சீனாவின் பொருள் உரிமை சட்டம் சீனத் தேசிய மக்கள் பேரவையில் தாக்கல் செய்யப் பட்டது என்ற விவரம் அறிந்தேன் இது ஒரு முன்னோடி சட்டம் ஆகும். சமத்துவ முறையில் பொருள் உரிமையை பாதுகாக்க இது உதவும். சீன மக்களுக்கு இது ஒரு வர பிரசாதமாகும்.
.......... மதுரை-20 ஆர்.அமுதாராணி,
சீன அரசவையின் செய்தி பணியகம் 8ம் நாள்,2006ம் ஆண்டு மனித உரிமை அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையில் பலசான்றுகளை மேற்கோள்காட்டி அமெரிக்கவில் பல மனித உரிமையை மீறிய பிரச்சனைகளின் நிலவரத்தை நிரூப்பித்துள்ளது. அமெரிக்க அரசு தனது நாட்டில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கருத்தில் கொள்ளாமல் சீன அரசு குற்றம் சாட்டுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அமெரிக்க அரசு வெறும் பொய்யையும் புரட்டையும் கூறி தனது குற்றத்தை மறைக்க பார்க்கிறது என்பதுதான் உண்மை.
பாண்டிச்சேரி பெரிய காலாப்பட்டு பெ.சந்திரசேகரன்
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டுக் கூட்டத் தொடரின் முக்கிய பங்கு என்ன என்பதை உடனுக்குடன் விரிவான தகவல்களை தந்து வருவதன் மூலம், சீன மக்கள் பேரவையின் பணி எப்படி நடந்து வருகிறது என்பதையும், ஆண்டுக்கு ஒரு முறை கூடி மக்களின் கருத்தை கேட்டறிந்து கொள்கின்றனர் என்பதையும் எத்தனை பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்.


சீனத் தலைமை அமைச்சர் அளித்த பணியறிக்கையை கேட்டபோது, சீன மக்கள் நலத்தின் மேல் அதிக கவனம் செலுத்தி, மிகுந்த அக்கறையுடன் தயாரிக்கப்பட்டு உள்ளதை உணர்ந்தேன். சீன மக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும், புதிய கொள்கைகள் பல நடைமுறைப்படுத்தப்பட இருப்பதை, இந்த பணி அறிக்கையில் சுட்டிக் காட்டி இருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். 5000 ஆண்டுகள் பழமையான சீனப் பண்பாட்டை பேணிகாத்து, அதன் வழியில் நடந்து வரும் சீனா, தன் தூதாண்மை உறவை பல நாடுகளிடையே உருவாக்கி வலுப்படுத்தி வருவதன் மூலம், பல வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், சீனாவில் கால்பதித்து உள்ளதையும், அவற்றுக்கு சிறப்பு சலுகைகள் தரப்பட்டுள்ளதையும், தான் அளித்த வாக்குறுதியை எப்போதுமே தவறாமல் நிறைவேற்றி வருவதையும் பாராட்ட வேண்டும். இவ்வாண்டு பணியறிக்கையில் குறிப்பிடப்பட்டவைகளில், குறிப்பாக சீனக் கிராமபுற மக்களின் மேண்மைக்கு கவனம் செலுத்தி இருப்பதும், விவசாயிகளுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து இருப்பதும், மருந்து கட்டணம் ஆகியவை ரத்து செய்யப்பட்டிருப்பதும் விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயரும் என்பதையே காட்டுகிறது. மேலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மக்களின் சீரான வாழ்விற்கு வழி செய்வதும், இணக்கமான சமூகத்தை நிலையான அமைதியை உருவாக்க நினைக்கும், சீன அரசின் தார்மீக உணர்வை பெரிதும் மதிக்கிறேன்.
சீன பணி அறிக்கையில் உள்ள அனைத்தும், சீன மக்களிடம் விரைவாக சென்று அடையவேண்டும். இந்த கலந்தாய்வு கூட்டத்தொடர் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.