• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-20 15:59:56    
ஷாவோலின் கோயில்-இரண்டிம் பாகம்

cri

இதோ, குங் பூ பயிற்சி செய்யும் இந்தச் சின்னஞ்சிறு சிறுமி என்ன சொல்கிறாள் கேட்போமா?
சிறுமி பேட்டி ஆரவார வரவேற்புக்கு இடையே ஷாவோலின் கோயிலுக்குள் அடியெடுத்து வைக்கும் போது, ஒரு பிரம்மாண்டமான சிலை. இது யாருடைய சிலை, ராஜா.

 
ரா:கோயில் பற்றிய பல கட்டுக்கதைகள் இருந்தாலும், ஷாவோ லின் கோயிலை. கி. பி. 495 ஆண்டில் கட்டியவர் பேரரசர் Xiao Wen. சீனாவுக்கு புத்தமதத்தைப் பரப்ப மேற்குப் பகுதியில் இருந்து வந்த பத்ர என்ற முனிவருக்காக இந்தக் கோயில் கட்டப்பட்டது. 30 ஆண்டுகள் கழித்து போதிதர்மா என்ற இந்தியத்துறவி ஷாவோலின் கோயிலுக்கு வந்து ஜென் பெளத்தத்தைப் போதித்தார். அந்த முனிவரின் சிலைதான் இது. போதிதர்மா அல்லது தர்மபாலர் என்ற பெயர் கொண்ட இந்த முனிவரை சீனர்கள் தாமோ முனிவர் என்று அழைக்கின்றனர். ஒரு சுவருக்கு முன்னால் ஆடாமல் அசையாமல் அமர்ந்து உலக நினைவே இல்லாமல், நீண்டகாலம் தவம் செய்தால்தான் நிர்வாணத்தை அடைய முடியும் என்று தாமோ முனிவர் நம்பினார்.
ஆனால் அவருடைய சீடர்களால் நீண்ட நேரம் அமர்ந்தபடி ஆழ்நிலைத் தியானம் செய்ய முடியவில்லை. கால்களைச் சம்மணமிட்டு உட்கார்ந்தபடியே இருந்ததால் ரத்த ஓட்டம் தடைப்பட்டது. இதனால் தவம் குலைந்தது. இந்தக் குறையைச் சமாளிக்க துறவிகளின் உடலில் அசைவுகள் இருக்க வேண்டும் எனத் தாமோ முனிவர் தீர்மானித்தார். அதன் அடிப்படையில் தோன்றியது தான் தாய்ச்சி என்னும் நிழல் குத்துச் சண்டை.


வி. இன்றைக்கு சீனா முழுவதும் மக்கள் தெருக்களில் கூடி இசைக்கு ஏற்பட தாய்ச்சி நடனம் ஆடுவதற்கும் இது தான் காரணமா?
ரா:ஆமாம். உடம்பை ஒரே சீரான, மெதுவான வேகத்துடன் இயக்குவதே அடிப்படை உடற்பயிற்சி. இதில் இருந்து தான் மற்றவகை வூ ஷு விளையாட்டுக்கள் தோன்றின்.
வி:குங் பூஃ என்பதை வூ ஷு என்று சொல்கிறார்களே. ஏதாவது காரணம் உண்டா?
ரா:பறவைகள் மற்றும் விலங்குகளைப் போல் பாய்ந்து தாக்கும் ஐந்து வகை குங் பூஃ விளையாட்டுக்கள் தான் வூ ஷு எனப்படுகின்றன. தற்காப்புக்காகவும், தாக்குவதற்காகவும் பெளத்தத் துறவிகள் பதுங்கிப்பாயும் புலி போல புலிப்பாய்ச்சல் காட்டினார்கள், வானில் வட்டமிட்டு இரையைத் திடீரெனக் கொத்தும் கழுகைப் போல வளைந்து வளைந்து தாக்கினார்கள். குரங்கு போல குதித்துத் தாக்கினார்கள். முயல் போல தாவித்தாவிக்குதித்து தாக்கினார்கள். கையில் கம்பு, வாள் மற்றும் ஈட்டி, சாட்டை போன்ற சாதனங்களைச் சுழற்றியபடியும் தாக்கினார்கள். இவ்வாறாக பல்வகை வூ ஷு வடிவங்கள் உருவெடுத்தன. இப்படித் தாக்கப்படும் போது, தாக்கப்படுகிறவர் ஆடாமல் அசையாமல் உறுதியாக நிற்பார். கீழே விழமாட்டார். அப்போது அவர் நிற்கும் இடத்தில் தரையில் இரண்டுகால்களும் பதிந்து பள்ளம் ஏற்பட்டு விடுகிறது. ஷாவோலின் கோயிலில் ஆயிரம் கடவுள்கள் மண்டபத்தின் தரையில் இத்தகைய பல பள்ளங்களைக் காணலாம். சுயி வமிசத்தின் கடைசிக் காலத்தில் ஷாவோலின் கோயிலைச் சேர்ந்த 13 துறவிகள் ஷாவோலின் போர்க்கலை மூலம் லி ஷிமின் என்ற சிற்றரசனின் உயிரைக் காப்பாற்றினார்கள். இதனால் அவன் கோயிலுக்கு பெரும் நிலப்பரப்பை வழங்கி, 500 துறவிகள் அடங்கிய படை அணி ஒன்றையும் ஏற்படுத்தினான்.


இவ்வாறு உடலையும் உள்ளத்தையும் வலுவாக வைப்பதற்காக இந்திய முனிவர் தாமோ உருவாக்கிய குங் பூ, இன்றைக்கு சீனர்களின் அயராத முயற்சியினால் உலகெங்கும் பரவிவிட்டது.