• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-21 11:29:52    
காட்டு அன்னமும் சேவலும்

cri

லு தேசத்து சிற்றரசன் ஆய் என்பவனிடம் டியன் ராவ் என்றொரு அமைச்சர் இருந்தார். ஆனால் அவருடைய திறமைகளை மன்னன் புரிந்து கொள்ளைவில்லை. பாராட்டவில்லை. எப்போதுமே கண்டனங்கள்-வசைகள்-விமர்சனங்கள்.

ஆகவே, இந்த தேசத்தை விட்டுப் போய்விடலாம் என முடிவுகட்டிய அமைச்சர் டியன், மன்னனிடம், "மன்னரே, காட்டில் உள்ள அன்னம் விண்ணில் பறந்து செல்வது போல நான் போய்விடப் போகிறேன்" என்றார்.

"நீங்க என்ன சொல்கிறீங்க அமைச்சரே?"

"மன்னரே, நீங்க சேவலைப் பார்த்திருக்கிறீகளா? அதனிடைய தலையிலே சிவப்புக் கொண்டை எவ்வளவு அழகு! அதனிடைய கால்களில் கூரிய நகங்கள் எவ்வளவு வலிமை! எந்த நேரத்திலும் சேவல்கட்டு சண்டைக்குத் தயாராக இருக்கிறது. தின்பதற்கு தானியம் ஏதாவது தட்டுப்பட்டு விட்டால் உடனே மற்ற கோழிகளை கூவியழைத்து பகிர்ந்து உண்கிறது. தானே தன்னந்தனியாகக் கொத்தித் தின்பதில்லை. என்னை கருணை பாருங்கள்! இரவு எழுவதும் விழித்திருந்து மொழுது விடிந்ததும் கொக்கரக்கோ என்று கூவி நம்மை துயில் எழுப்புகிறது எவ்வளவு விசுவாசம்! சேவலிடம் இந்த ஐந்து நற்பண்புகள் இருந்தாலும், வீ்ட்டுக்கு விருந்து வந்ததும் அந்த சேவலைப் பிடிச்சி அடி, விருந்து சமைக்கலாம் என்று தான் உத்தரவு போடுறீங்க. எதனால? சேவல் வங்க பக்கத்திலேயே இருக்குங்கிறது தானே காரணம்? காட்டு அன்னத்தைப் பாருங்க. இறகடித்து நூற்றுக்கணக்கான மைல் தொலைவு பறந்து விடுகிறது. உங்க அரண்மனை நந்தவனத்திலே வந்து உட்கார்ந்து, குளத்திலே இருக்கிற மீன்களையும் ஆமைகளையும் விழுங்கி ஏப்பம் விடுகிறது. வீட்டுலே இருக்கிற தானியங்களையும் பரும்புக்களையும் கொத்தித் தின்றுவிடுகிறது. சேவலிடம் இருக்கும் ஐந்து நல்ல குணங்கள் காட்டு அன்னத்திடம் இல்லா விட்டாலும், அதைத் தாக்கி வைத்து தடவிக் கொத்து கொஞ்சுகிறார்கள். ஏன்? அது வெகு தொலைவில் இருந்து வருவதாலா? அனுமதி கொடுங்க. நானும் காட்டு அன்னும் போல பறந்து போயிடறேன்."

"நில். நீ சொன்ன கதையை எழுதி வைத்துக் கொள்கிறேன்" என்றான் மன்னன்.

"மன்னரே, உணவளிக்கும் பாத்திரத்தை ஒருவன் உடைப்பதில்லை. நிழல் தரும் மரத்தின் கிளையை, அதன் கீழே உட்கார்ந்திருப்பவன் ஒடிப்பதில்லை.

கெட்டிக்காரனுக்கு அவனுடைய திறமைகளைப் பயன்படுத்த ஒரு வாய்ப்பு தராமல், அவன் சொல்வதை மட்டும் எழுதி வைத்து என்ன பயன்?" என்று கூறிவிட்டு, யான் தேசத்திற்கு அமைச்சர் டியன் சென்றார். அங்கே தலைமை அமைச்சராக ஆக்கப்பட்டார். மூன்றே ஆண்டுகளில் யான் தேசத்தில் கொலை-கொள்ளை ஒழிந்தது. ஒரு திருடனைப் பார்க்க முடியவில்லை. இதைக் கேள்விப்பட்ட லு தேசத்து சிற்றரசன் ஏக்கப் பெருமூச்சு விட்டான்.

இதைத் தான் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ் காரம் என்பதோ!