• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-21 11:46:12    
தமிழ் மூலம் சீனம் பாடம் 73

cri

ராஜா........கலை கடந்த இரண்டு வகுப்புகளில் நாம் கற்றுக் கொண்ட பணம் பற்றிய சொற்களைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கும் பயிற்சி செய்தோம்.

கலை.....ஆமாம். கடைக்குப் போய் நீங்கள் பொருள் வாங்கினால் பணத்தின் மதிப்பை நன்றாக புரிந்து கொள்ள முடியும். அன்றாட வாழ்க்கையில் பணத்தை பயன்படுத்துவதில் இனிமேல் இன்னல் இருக்காது என்று நம்புகின்றேன்.

ராஜா.......நீங்கள் சொன்னது சரிதான். இப்போது பணத்தின் மதிப்பு எனக்கு முன்பை விட தெளிவாகத் தெரிகிறது. பேரம் பேசி விலை குறைத்து வாங்க முடிகின்றது.

கலை......சரி கடந்த இரண்டு வகுப்பில் முக்கியமாக துணி வாங்குவது தொடர்பான சொற்களை கற்றுக் கொண்டோம். புதிய வகுப்பு துவங்குவதற்கு முன் கடந்த இரண்டு வகுப்புகளில் கற்றுக் கொண்ட சொற்களை பேசிப் பார்க்கலாமா?

ராஜா......எனக்கு ஒரு யோசனை. கற்றுக் கொண்ட சொற்களை நான் முதலில் சொல்லலட்டுமா?

கலை.......தாராளமாக சொல்லுங்கள்.

ராஜா...... அப்படியானால் நான் கடைக்காரர், நீங்கள் பொருள் வாங்க வந்தவர் என்ற முறையில் உரையாடுவோம்.

கலை.........துவங்குங்கள்.

ராஜா........你 好! 这 里 是 布 店。
                  நி ஹாவ். ச்செ லி ஸ் பு தியன்.

கலை.......வண்க்கம். இது துணிக் கடை.

ராஜா........请 问 . 你 要 买 布 么?
                   ச்சின் வென். நி யோ மைய் பு மா?

கலை........நீங்கள் துணி வாங்க வேண்டுமா?

கலை...... 我 想 买 布。
                   வோ சியான் மைய் பு.

ராஜா.......நான் துணி வாங்க வேண்டும்.

ராஜா............要 买 什 么 布?
                       யோ மைய் ஷி மா பு

கலை..........எந்த வகை துணி வாங்க வேண்டும?

ராஜா............这 儿 有 花 布, 丝 绸 和 白 布.
                       ச்செ அள் யோ குவா பு, ஸ் ஸோ ஹொ பைய் பு.

கலை...........இங்கே பூ தையல் துணி, பட்டு துணி மற்றும்
வெள்ளை துணி உண்டு.

கலை........我 要 买 丝 绸 布。
                    வோ சியான் மைய் ஸ் ஸோ பு.

ராஜா...... நான் பட்டு துணி வாங்க வேண்டும்.

ராஜா........你 要 买 多 少 米 布?
                   நி யோ மைய் தோ ஷௌ மி பு?

கலை.......எத்தனை மீட்டர் பட்டு துணி வாங்க வேண்டும்? 
                    我 要 买 1 2 米 丝 绸 布,
                   வோ யோ மைய் ஸ் அள் மி ஸ் ஸோ பு.

ராஜா.......நான் 12 மீட்டர் பட்டு துணி வாங்குகின்றேன்.

கலை...... 每 米 多 少 钱? 
                   மெ மி தோ ஷௌ ச்சியன்?

ராஜா.......பட்டு துணி விலை என்ன? 
                    每 米 丝 绸 要 50 块 钱,
                   மெய் மி ஸ் ஸோ பு யோ வூஸ் குவய் ச்சியன்.

கலை.......பட்டு துணி விலை ஒரு மீட்டருக்கு 50 யுவான்.
                   太 贵 了.
                   தை குய் லெ.
ராஜா.......விலை மிகவும் அதிகம். 不 贵。 
                                                                        பு குய்
                  你 买 12 米 丝绸 布。
                   நி மைய் ஸ்அள் மி ஸ்ஸோ பு , 
                  我 可以给 你 便宜 100 块 钱
                  வோ கெய் நி பியன்யி யி பைய் குவய் ச்சியன்.

கலை.......விலை அதிகம் இல்லை. நீங்கள் 12 மீட்டர் பட்டு துணி வாங்கினால், 100 யுவான் தள்ளித் தருகின்றேன்.

கலை......... 谢 谢, 我 买 了。 
                      ஸெய் ஸெய். வோ மைய் லெ.

ராஜா........நன்றி நான் வாங்குகின்றேன். 

கலை........நண்பர்களே. கடந்த வகுப்பில் கற்றுக் கொண்ட சொற்களை மீண்டும் பேசிப்பழகலாம்.

ராஜா.......கலை இந்த வகுப்பில் பணம் தொடர்புடைய செயல்கள் பல உண்டு. அப்படிதானே.

கலை........ஆமாம். நமது வாழ்க்கையில் துணி வாங்கும் வேலை நாள்தோறும் வராது. வாழ்க்கையில் முக்கியமான சிறிய காரியங்கள் என்ன தெரியுமா?

ராஜா........வாழ்க்கையில் தினந்தோறும் செய்ய வேண்டிய
வேலைகள் காய்கறி, பழம் அரிசி, உப்பு முதலிய பொருட்களை வாங்குவது.

கலை......ஆமாம். ஆகவே நீங்கள் குறிப்பிட்ட பொருட்களை வாங்கும் போது பணம் பயன்படுத்த வேண்டும்.

ராஜா.......தவிரவும் வாழ்க்கையில் தேவைப்படும் பழங்கள், காய்கள், உணவு பொருட்கள் ஆகியவை தவிர, சட்டை, காலணிகள் போன்ற பொருட்களையும் வாங்க வேண்டும்.

கலை........ஆகவே இன்றைய வகுப்பின் இரண்டாவது பகுதியில்

ராஜா.........காலணிகளை வாங்குவது தொடர்பான சொற்களை கற்பிக்கலாமா?

கலை.......சரி கற்பிக்கலாம். முதலில் சில சொற்களை நான் சொல்கின்றேன். 
                    颜 色, 蓝 色, 红 色, 穿,
                    யென் ஸெ, லன் ஸெ, ஹுன் ஸெ, ஸ்சான்.
                   多 大 号, 试 试, 合 适,
                   தோ தா ஹாவ் ஷ் ஷ், ஹொ ஷ்

ராஜா.......நிறம், நீல நிறம், சிவப்பு நிறம், அணி. எந்த அளவு, அணிந்து பார்க்கலாமா, பொருத்தம்.

கலை.......மீண்டும் சொல்கின்றோம்.
                   颜 色, 蓝 色, 红 色, 穿,
                   யென் ஸெ, லன் ஸெ, ஹுன் ஸெ, ஸ்சான்.
                   多 大 号, 试 试, 合 适, 旅游 鞋
                  தோ தா ஹாவ் ஷ் ஷ், ஹொ ஷ், லியூ சியெ.

ராஜா.......நிறம், நீல நிறம், சிவப்பு நிறம், அணி. எந்த அளவு, அணிந்து பார்க்கலாமா, பொருத்தம். காலணிகள். 

கலை.......இப்போது நாம் கற்பித்த சொற்களை வாக்கியத்துடன் சேர்த்து பயிற்சி செய்வோம்.

ராஜா.......... நான் கடைக்காரர் நீங்கள் பொருள் வாங்க வந்தவர் முறையில் பயிற்சி செய்யலாமா?

கலை......இந்த முறை மாற்றுவோம். நான் கடைக்காரர் நீங்கள் பொருள் வாங்க வந்தவர் முறையில் பேசுவோம்.

ராஜா......சரி. ச்செ லி ஷ் சியெ தியன்.

கலை,.......இது காலணி கடை.

ராஜா......நி ஹோ, சின் வன் யோ மெய் லியூ சியெ மா?

கலை.....வணக்கம், இங்கே காலணிகள் விற்பனை செய்ப்படுகின்றதா?

கலை......யூ, நி யோ மைய் ஷ் மா யான் தெ?

ராஜா...... எந்த வகை காலணிகள் உங்களுக்குத் தேவை?

ராஜா......வோ யோ மைய் யி சுவான் லன் ஸெ தெ லியூ சியென்.

கலை......நான் நீல நிற காலணிகளை வாங்க வேண்டும்.

கலை........துவெய் பு ச்சி. மெய் யூ லன் தெ. யூ ஹுன் தெ. ஷ்ஷ் மா/

ராஜா.......மன்னிக்கவும். நீல நிறக் காலணிகள் தற்போது இல்லை. சிவப்பு நிற காலணிகள் உண்டு அணிந்து பார்க்கலாமா?

ராஜா........ஹோ, வோ சியென் ஷ்ஷ் பா.

கலை..... சரி நான் முதலில் அணிந்து பார்க்கலாம்.

ராஜா.....நண்பர்களே. இப்போது தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நேரம் ஆகின்றது. அடுத்த வகுப்பில் மீண்டும் சந்திப்போம்.