• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-21 15:47:24    
பழைய வீட்டுக்கு பிரியா விடை

cri

சீனாவின் வட கிழக்கு பகுதியிலுள்ள லியௌ நிங் மாநிலம், பழம்பெரும் தொழில் துறைத் தளமாக உள்ளது. கடந்த காலத்தில் பெருவாரியான தொழிலாளர்களின் வசிப்பிடப் பிரச்சினையைத் தீர்க்க, பல இடங்களில் அதிகப்படியான தற்காலிக வீடுகள் கட்டப்பட்டன. தற்போது இந்த வீடுகள் பாழடைந்துள்ளன. ஆனால், சீரமைப்பு மிகவும் கடினம் என்பது உள்ளிட்ட காரணங்களால், தற்காலிக வீட்டுப் பகுதிகள் சில தக்க வைக்கப்பட்டுள்ளன. மோசமான நிலையிலான இந்த வீடுகளில் பலர் இன்னமும் வாழ்கின்றனர். 2005ஆம் ஆண்டு முதல், லியௌ நிங் மாநிலம் பெரும் முயற்சி மேற்கொண்டு, இந்த வீடுகளைப் பெருமளவில் சீரமைக்கத் துவங்கியது. பெருவாரியான பாழடைந்த தற்காலிக வீடுகள் அகற்றப்பட்டு, ஆடம்பர புதிய கட்டிடங்களுக்கு மக்கள் குடிபெயர்ந்துள்ளனர்.

லி ச்சென் சுன் என்பவர் கூறியதாவது—

"கட்டிடத்தைக் கண்டதும் என் கண்களில் நீர் வழிந்தது. இவ்வளவு நன்றாக உள்ள கட்டிடத்தில் வாழ்வேன் என்று நான் எண்ணவில்லை" என்றார் அவர்.
லி ச்சென் சுன் அம்மையார், லியௌ நிங் மாநிலத்தின் பு சுன் நகரைச் சேர்ந்தவர். அவர் அண்மையில்தான் பாழடைந்த தற்காலிக வீட்டிலிருந்து புதிய கட்டிடத்துக்குக் குடிபெயர்ந்து, லியௌ நிங் மாநிலத்தின் தற்காலிக வீட்டுச் சீரமைப்பில் பயன் பெற்றவர்களில் ஒருவராக மாறினார். முன்பு அவர் வசித்த தற்காலிக வீட்டின் வசதிகள் எளிமையானதாகவும் மோசமாகவும் உள்ளன. வீட்டின் கூரை ரசாயண முறையில் தயாரிக்கப்பட்ட தார்விரிப்பால் ஆனது. சுவரில் விரிசல்கள் காணப்படுகின்றன. கழிப்பறைக்குச் செல்ல வேண்டுமானால் வெளியே போக வேண்டியிருக்கிறது.

லியௌ நிங் மாநிலத்தில், லி ச்சென் சுன் போன்று நீண்டகாலமாய் தற்காலிக வீடுகளில் வாழ்ந்த மக்கள் குறைவாக இல்லை. பு சுன் நகரை எடுத்துக்காட்டாக கூறினால், 2004ஆம் ஆண்டின் இறுதி வரை, 50 ஆயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்புடைய, தற்காலிக வீட்டுக் குடியிருப்புப் பகுதிகளின் எண்ணிக்கை 10க்கும் மேலாக இருந்தது. 70 ஆயிரம் குடும்பங்கள் அங்கே வாழ்ந்தன. தற்காலிக வீட்டின் சீரமைப்புக்கு லியௌ நிங் மாநிலத்தின் பல்வேறு நிலை அரசாங்கங்கள் எப்போதுமே முக்கியத்துவம் தருகின்றன.

2005ஆம் ஆண்டில், பல்வேறு துறைகளின் ஆயத்தப் பணிகள் பக்குவம் அடைந்ததன் அடிப்படையில், லியௌ நிங் மாநில அரசு மாநிலம் முழுவதிலும் உள்ள தற்காலிக வீட்டுக் குடியிருப்புப் பகுதிகளை பெரும் முயற்சியுடன் சீரமைக்கத் துவங்கியது.

இம்மாநிலத்தின் பொறுப்பாளர் லி கே சியாங் கூறியதாவது—

"தற்காலிக வீட்டுக் குடியிருப்புப் பகுதிகளில் வாழ்ந்தவர்களில் பெரும்பாலானோர் முன்பு சுரங்கத் துறையில் ஈடுபட்ட தொழிலாளர்களாவர். நாட்டுக்கு அவர்கள் பங்காற்றியுள்ளனர். இப்போது அவர்களுக்காக அடிப்படை வசிப்பிடப் பிரச்சினையைத் தீர்க்கின்றோம். பழம்பெரும் தொழில் துறைத் தளம் மீண்டும் வளர்ச்சி அடைவதன் மூலம் கிடைத்த பயனை, மேலும் அதிகமான பொது மக்கள் அனுபவிக்கச் செய்ய வேண்டும்" என்றார் அவர்.

1 2