• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-22 22:23:47    
சியான் சுவான் அருங்காட்சியகங்கள்

cri

தென்மேற்கு சீனாவின் சிசுவான் மாநிலத்தில், சீனாவில் மிகபெரிய அரசுசார திரட்டல் அருங்காட்சியகக்குழுக்கான சியான் சுவான் அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளன. 30 ஹெக்டர் பரப்பளவில் பத்துக்கணக்கான பொருட்காட்சி அகங்களால், அரசுசார தனியார் சேகரிப்புப் பொருட்களை காட்சிக்கு வைப்பது முக்கியமாக கொள்ளும் அரங்காட்சியகக்குழு, உருவாக்கப்பட்டது. இன்று உங்களுடன் இணைந்து, சியான் சுவான் அருங்காட்சியகங்களைப் பார்வையிட்டுக் கொள்கின்றோம்.

சிசுவான் மாநிலத்து தா யீ மாவட்டத்தின் ஆன் ரென் வட்டத்திலுள்ள இந்த அருங்காட்சியகங்கள், 2005ம் ஆண்டின் ஆக்ஸ்டு திங்களில் திறந்து வைக்கப்பட்டது. திட்டத்தின் படி, இவ்வருங்காட்சியகக்குழுவில், மொத்தம் 25 பொருட்காட்சி அரங்குகள், மூன்று நினைவு சத்துரங்கள், சில தலைப்பு ஹோட்டல்கள் ஆகியவை, பெரிய ரக பொருட்காட்சியகங்கள் குழுமி மண்டலமாக உருவாக்கும். தற்போது, 8 பொருட்காட்சி அரங்குகளும், இரண்டு நினைவு சத்துரங்களும் பயணிக்களுக்கு அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளன.

சியான் சுவான் அருங்காட்சியகங்களில் திரட்டப்பட்ட பொருட்காட்சிகளின் எண்ணிக்கை, 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அவற்றின் வகை, காலம் முதலியவற்றின் படி, மூன்று பகுதி பொருட்காட்சிகளாக காட்சிக்கு வைக்கப்பட்டன. முதலில், 2வது உலக போர் காலத்தில் சீனாவில் நிலவிய நினைவுப் பொருட்கள். இதில், அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்கள், சட்டைகள், கடிதங்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் முதலியவை இடம்பெறுகின்றன. இரண்டாவது பகுதியில், பீங்கான், நிகழ்பட badge, பிரச்சார படங்கள் உள்ளிட்ட கலைப்பொருட்கள். அவை எல்லாம், 1966ம் ஆண்டு முதல், 1976ம் ஆண்டு வரையான சீனாவின் தனிச்சிறப்பான வரலாற்று காலத்தில் ஏற்பட்ட பொருட்களாகும். மூன்றாவது பகுதியில், பண்டைகால வீட்டுச்சாம்கள், பழைய புகைப்படங்கள் அடங்கிய சீனாவின் நாட்டுப்புற பண்பாட்டுக் கலைப்ரொட்கள், முக்கியமாக காட்சிக்கு வைக்கப்பட்டன.

FAN JIAN CHUAN என்பவர், இந்த அருங்காட்சியகங்களின் துவக்கயாளராவார். இதில் பல பொருட்களை, அவர் கடந்த 20 ஆண்டுகளில் சேகரித்துள்ளார். ஒவ்வொரு பொருளின் கதை பற்றி, அவர் தெளிவாக சொல்லலாம். ஒரு பொதுவான கத்தியால் வெட்டு பற்றி, அவர் கூறியதாவது:

இது, சான் சி மாநிலத்தில் முதியோர் பயன்படுத்திய கத்தியால் வெட்டு ஆகும். இதற்காக நான் சிறப்பாக சான் சி சென்றுள்ளேன் என்றார் அவர்.

பல்வேறு இடங்களில் சேகரிப்பதை தவிர, வெளிநாட்டு நண்பர்கள் சில பொருட்களை வழங்கியுள்ளனர். 2005ம் ஆண்டில், திரு ROBERT GRUBER, சியான் சுவான் அருங்காட்சியகங்களுக்கு பல பொருட்களை வழங்கியுள்ளார். அவர், அமெரிக்காவின் Flying Tigers (US airmen in China during World War Two) என்ற படையினர் ஆவார். இப்படைவீரரின் சட்டை, மீட்புதவி அட்டைகள் முதலியவற்றை வழங்கியுள்ளார். திரு ROBERT GRUBER இங்கு வருகை தந்த நிலைமை பற்றி, சியான் சுவான் அருங்காட்சியகத்தின் பணியாளர் CHEN YE அம்மையார் கூறியதாவது:

கடந்த ஆக்ஸ்டு திங்களில், அவர் சென்தூ வந்து, எமது அருங்காட்சியகங்களைப் பார்வையிட்டார். அப்பொழுது அவர் பயன்படுத்திய பல பொருட்களை வழங்கினார் என்றார் அவர்.

இந்தப் பொருட்களை, பயணிகளுக்கு செவ்வனே பொருட்காட்சி எடுத்துக்காட்டும் பொருட்டு, சியான் சுவான் அருங்காட்சியகம் பல வழிமுறை பயன்படுத்த முயல்கிறது. இப்பொழுது, ஒரு பழைய திரைப்படம், கார்டுன், மின் விளையாட்டு முதலியவற்றின் மூலம், பயணியர்கள் இந்தப் பொருட்களின் வரலாற்றை அறிந்துகொள்ளலாம்.