• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-22 15:43:31    
சீனாவில் மிகப் பெரிய மருத்துவ மனை

cri
சீனாவில் மிகப் பெரிய மருத்துவ மனை     பெய்ஜிங் மாநகரைச் சேர்ந்த சாங்பிங் மாவட்டத்தில், சீனாவின் மிகப் பெரிய மருத்துவ மனை கட்டியமைக்கப் படவுள்ளது. அங்குள்ள பிரபல சொங்குவான் சுன் அறிவியல் தொழில்நுட்பப் பூங்காவில் அமையும் இம்மருத்துவ மனைக்கு, பெய்ஜிங் பல்கலைக்கழகச் சர்வதேச மருத்துவ மனை என்று பெயர். மொத்தம் 2 லட்சத்து 90 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவுடைய இம்மருத்துவ மனையில் 1800 நோயாளிப் படுக்கைகள் நிறுவப்படும். அதன் கட்டுமானப்பணி, வரும் ஜீன் திங்களில் துவங்கவுள்ளது. முதல் கட்டத் திட்டப்பணி, அடுத்த ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடங்குமுன் கட்டி முடிக்கப்பட்டுச் சேவையில் இறங்கும்.

உலகில் மிக உயரமான மர வீடு         ரஷியாவின் வட மேற்கிலுள்ள ஆர்ஹாங்கர்ஸ் நகரில் விசித்திர வடிவிலான மர வீடு ஒன்று வானளாவ நிற்கின்றது. 13 அடுக்கு மாடிகளுடன் கூடிய இம்மர வீட்டின் உயரம், 43.9 மீட்டர். இது, உலகின் மிக உயரமான மர வீடு எனக் கருதப்படுகிறது. நிகுலா சுதியாஜின் என்னும் கோடீசுவரர், மரத்தாலான இந்த அடுக்கு மாடி வீட்டைக் கட்டியமைக்க 15 ஆண்டுக்காலம் பிடித்தது. சுதியாஜினுக்கு இந்த மரவீடு மிகவும் பிடி்த்திருக்கிறது. தொலைவில் நின்று பார்த்தால், அது பாரம்பரிய ஜப்பானிய மரக் கோபுரம் போல் காட்சி அளிக்கும். ஆனால், அருகே சென்று பார்த்தால், அது வனத்தெய்வக் கதையிலான ராட்சதர் நாட்டின் மர வீடு போல் தோற்றமளி்க்கும் என்பது, அதன் தனிச்சிறப்பாகும்.

உக்ரைனில் 116 வயது முதியவர்                உக்ரைன் நாட்டில், கிரிகோலி ஞெஸ்தோல் என்பவர், மார்ச் 15ஆம் தேதி தமது 116வது பிறந்த நாளைக் கொண்டாடினார். உக்ரைனில் நீண்ட ஆயுளுடன் வாழும் முதியவர் அவரேயாவார். அவர்தம் பிறந்த நாளன்று, உள்ளூர் அரசு அவருக்கு அன்பளிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தது. நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்குக் காரணம் என்ன என்று பிறர் கேட்ட போது , அவர் பதிலளித்ததாவது: ஒருவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமானால், முதலில் வெறும் கால்களால் நடந்து செல்ல வேண்டும். அடுத்து, தயிரை அருந்த வேண்டும். மற்றப்படி, திருமணம் செய்யக் கூடாது. நான் திருமணம் செய்திருந்தால் எப்பொழுதோ சவக்குழிக்குள் நுழைந்திருப்பேன் என்றார் அவர். ஞெஸ்டோல் கிழவர் தம் தம்பிப் பேத்தி ஒக்சானா குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். ஞெஸ்டோல் தாத்தா இன்னும் திடகாத்திரமாக இருக்கிறார் என்றும், உடலுழைப்பில் ஈடுபடச் சக்தி இல்லை என அவர் அடிக்கடி வருந்துவதாகவும் அவரது உறவினர் கூறினார்கள்.