சின்காய் திபெத் இருப்புப் பாதையின் திபெத் பிரதேசத்தில் பசுமைமயமாக்கம்
cri
சின்காய்-திபெத் இருப்புப் பாதையின் திபெத் பகுதியிலான பசுமைமயமாக்கத் திட்டப்பணி அண்மையில் துவங்கியது. தாங்குலா மலையிலிருந்து லாசாவுக்குச் செல்லும் சுமா 700 கிலோமீட்டர் தொலைவிலான இருப்புப் பாதை அருகில் பல பத்து ஆயிரம் படையினர்களும் மக்களும் மரங்களை நட்டு காடு வளர்ப்புப் பணியில் ஈடுபடத் துவங்கியுள்ளனர். இந்தத் திட்டப்பணி 5 ஆண்டுகளுக்குள் நிறைவடையும். ஆண்டுதோன்றும் கிட்டத்தட்ட 5000 ஹேக்டர் நிலப்பரப்பில் மரங்கள் நடப்படும் என்று இந்த நடவடிக்கையில் கலந்து கொள்ளும் தொண்டர்கள் அறிமுகப்படுத்தினர். உள்ளூர் வனப் பாதுகாப்பு பணியாளர்கள், தொழில் நிறுவனங்கள், தொண்டர்கள் முதலியோர் இந்த மரங்களைக் கூட்டாக நிர்வகிப்பர் என்று தெரிய வருகின்றது.
|
|