• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-23 15:59:25    
நீச்சல் உலக சாம்பியன் போட்டிகள்

cri

நீச்சல் விளையாட்டு கூட்டமைப்பின் 12வது உலக சாம்பியன் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் கடந்த 17ம் நாள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவாக் ஐந்த 12வது உலக நீச்சல் சாம்பியன் போட்டிகளில் 173 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் கலந்துகொள்கின்றன. போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் வெற்றியாளர்களுக்கு மொத்தத்தில் 19 லட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்படவுள்ளது. நீச்சல் போட்டிகளில் உலக சாதனைகள் பதித்தால் அதற்கு சிறப்பாக 25 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும். நீச்சல் விளையாட்டுக் கூட்டமைப்பின் வரலாற்றில் இந்த 2007 மெல்போர்ன் நீச்சல் விளையாட்டு உலக சாம்பியன் போட்டிகள் மிகச்சிறந்ததாக அமையும் என்று இக்கூட்டமைப்பின் தலைவர் லார்ஃபூயி குறிப்பிட்டார். கடந்த சனியன்று நடைபெற்ற துவக்க விழாவில் அண்மையில் நீச்சல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய நீச்சல் சாதனையாளர் இயான் தோர்ப் சிறப்புடன் மரியாதை செய்யப்பட்டார்.

173 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 2200 நீச்சல் வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொள்ளும் இந்த 12வது நீச்சல் உலக சாம்பியன் போட்டிகளின் 6ம் நாள் வரையிலான பதக்கப்பட்டியலின்படி, ரஷ்யா முதலிடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும், ஜெர்மனி மூன்றாம் இடத்திலும் உள்ளன. அவற்றைத் தொடர்ந்து பிரான்ஸ், ஸ்பெயின், ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன், க்ரீஸ், இத்தாலி, அமெரிக்கா ஆகியவை 4 முதல் 12ம் இடம் வரை பெற்றுள்ளன. வருகின்ற ஏப்ரம் முதல் நாள் வரையில் இந்த போட்டிகள் நடைபெறும்.