• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-23 16:03:21    
உலக பனிச்சறுக்கு நடனப்போட்டி

cri

ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற்ற உலக பனிச்சறுக்கு நடனப்போட்டியில் சீன இணை ஷென் சுயே, சாவ் ஹுங்போ ஆகியோர் பனிச்சறுக்கு நடன இணை பிரிவில் தங்கம் வென்றுள்ளனர்.

கடந்த செவ்வாயன்று நிகழ்ந்த குறுகிய நேர பனிச்சறுக்கு நடனத்திலும், புதனன்று நடந்த ஃப்ரீ ஸ்கேட் பாணி பனிச்சறுக்கு நடனத்திலும் முதலிடத்தை பெற்ற இந்த சீன இணைக்கு இவ்வாண்டின் உலக சாம்பியன் பட்டமும் பதக்கமும் அவர்கள் பெற்ற மூன்றாவது உலக சாம்பியன் பட்டமாகும். ஏற்கனவே 2002, 2003 ஆகிய ஆண்டுகளில் பனிச்சறுக்கு நடனத்தின் ஆடவர் பெண்டிர் இணை பிரிவுப்போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற ஷென் சுயே, சாவ் ஹுங்போ இருவரும் 2004ம் ஆண்டிலான உலக சாம்பியன் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தனர். சாவ் ஹுங்போவின் கால்மூட்டில் ஏற்பட்ட காயம் ஒன்றால் 2005ம் ஆண்டு உலக சாம்பியன் போட்டியில் இந்த இணை கலந்துகொள்ளவில்லை. மீண்டும் 2006ம் ஆண்டு இத்தாலியின் டூரின் நகரில் இடம்பெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஷென் சுயே, சாவ் ஹுங்போ இணை வெண்கலப் பதக்கம் பெற்றது.

இவ்வாண்டு உலக சாம்பியன் போட்டிகளை வென்ற ஷென் சுயே, சாவ் ஹுங்போ இணையைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நிற்கும் இணையான பங் சிங், துங் ஜியன் இருவரும் சீனர்களே. கடந்த ஆண்டின் உலக சாம்பியன் பட்டம் வென்றது இந்த இணையே.