• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-23 16:18:47    
கல்வி துறையிலான புகழ்பெற்ற பேராசிரியர்

cri

the Analects என்னும் கன்பியூசியஸின் இலக்கியத்துனுக்குகள் சீனாவின் கம்பஃயூசியஸிம் கல்வியின் தந்தையான கன்ஃபியூசியஸ் மற்றும் அவரது மாணவர்களின் கருத்துகளை திரட்டிய ஒரு நூலாகும். கிமுன் 3ம் அல்லது 4ம் நூற்றாண்டில் இந்த நூல் வெளியிடப்பட்டது. கம்பஃசியலின் மிக முக்கிய சிறப்புமிக்க பண்டைய இலக்கிய நூல்களில் இதுவும் ஒன்றாகும். ஈராயிரம் ஆண்டுகளாக, the Analects பற்றி, ஈராயிரம் அறிஞர்கள் விளக்கம் செய்துள்ளனர். இந்த நூலை அடிப்படையாக கொண்டு, கன்ஃபியூசியஸிசத்தின் வாழ்க்கை கருத்து, தத்துவ கருத்து, ஒழுக்கவியல் கருத்து, அரசியல் கருத்து, கல்வி கருத்து, பொருளாதார கருத்து, கலையிலக்கிய கருத்து ஆகியவற்றை ஆராய்வது பற்றிய நூல்களின் எண்ணிக்கை, ஆயிரக்கணக்கானவையாகும். வெகுவேகமான சமூக வளர்ச்சியால், மக்கள் படிப்படியாக the Analectsஐ, மறந்து வருகிறனர். யூ தான் அம்மையர், தொலைக்காட்சி நிகழ்ச்சியில், எளிய முறையிலும் கதை சொல்லும் முறையிலும் இந்த நூலை விளக்கினார். the Analects மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 70 வயதுக்கு மேல்பட்ட முதியோர்களும், இடை நிலை பள்ளி மாணவர்களும், கூட்டு நிறுவன பணியாளர்களும், குடும்பத்தில் இல்லத்தரசிகளும், அக்காலத்தில் இந்த நூலை பற்றியும் யூ தானை அம்மையார் பற்றியும் விவாதித்தனர்.

இணைய தளத்தில், இணைய தளத்தை பயன்படுத்து வோரால், யூ தான் அழகான பேராசிரியராக அழைக்கப்பட்டார். இப்போது, யூ தான், பெய்சிங் ஆசிரியர் பல்கலைகழகத்தின் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட துறையின் இயக்குநராக பணிபுரிகிறார். அவர், திரைப்பட மற்றும் தொலைகாட்சி கல்வியின் முனைவர் பட்டம் பெற்றார். முன்பு, சீனாவின் மத்திய தொலைகாட்சி நிலையத்தில், சுமார் 50 தொலைகாட்சி நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளார். ஆனால், கடந்த ஆண்டின் அக்டோபர் திங்களுக்கு முன், சமூகத்தின் பொது மக்கள், யூ தான் பற்றி பரவலாக அறிந்துக் கொள்ளவில்லை. பின்னர், சீன மத்திய தொலைகாட்சி நிலையத்தில் நூற்றுகணக்கானோளின் கருத்தரங்கு என்னும் நிகழ்ச்சியில், அவர், the Analects என்னும் நூலை விளக்கிக் கூறினார். ரசிகர்கள், ஆரவரமான வரவேற்பையும் ஆர்வத்தையும் வெளிகாட்டினர். கடந்த ஆண்டு நவம்பர் திங்கள் 26ம் நாள், the Analects பற்றிய யூ தானின் கருத்து என்னும் நூல் வெளியிடப்பட்டது. நூல் வாங்வோரின் பிரதியில் தனது கையெழுத்து அளிப்பதன் மூலம், யூதான் நூல் விற்பனையில் பங்கேற்றார். அன்று மட்டும் 12 ஆயிரத்து 600 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த நூலை வெளியிடுவதற்குப் பொறுப்பான சீன நூல் அலுவலகத்தின் துணை இயக்குநர் கு ச்சின் கூறியதாவது

இந்த நூல், இப்போது, 15 லட்சம் பிரதிகளில்விற்பனை செய்யப்பட்டுள்ளது. விற்பனை சாதனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏன் இந்த நூல் விற்பனை நன்றாகவுஅளளது? இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, இந்த நூல், சிறப்புமிக்க பண்டைய நூல். இரண்டாவது, நன்றாக பரவல் செய்யப்படுவது என்பன, இரண்டு குறிகோளுடன் கூடிய காரணங்களாகும். பாரம்பரிய பண்பாட்டை, பொது மக்களுக்கு பிரச்சாரம் செய்வது பற்றி யூ தான் நன்றாக அறிந்துக் கொண்டார். பொது மக்களின் மனதில் சீன பாரம்பரிய பண்பாடு பற்றிய புரிந்துணர்வை அவர் தூண்டியுள்ளார்.

அவள் 4 வயது முதல், the Analects, படிக்க துவங்கினார். அவளுடைய தந்தை, பண்பாடு மற்றும் வரலாறு ஆய்வு பணியில் ஈடுபட்டாவராவர். சிறிய வயதில், சீன பாரம்பரிய பண்பாட்டின் பாதிப்பில் வளர்ந்தார். யூ தானின் முதுகலை பட்டதாரி வகுப்பின் சிறப்பு, துறை, சீன பாரம்பரிய பண்பாடாகும். இவ்வாறாக, சிறு வயது முதல் எத்தனை முறை the Analects நூலை படித்துள்ளோம் என்பது அவருக்கு நினைவில் இல்லை. ஆனால், ஒவ்வொரு முறையும், அவர் படித்தபோது புதிய கருத்துக்களையும், உள்ளடக்கத்தையும் இதிலிருந்து பெற்றார்.