• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-26 14:59:42    
வாழையடி வாழை

cri

தமிழகத்தை ஒரு காலக்கட்டத்தில் வயிறு குலுங்கச் சிரிக்கவைத்த, கொஞ்சம் சிந்திக்கவும் வைத்த இரண்டு விடயங்களில் ஒன்று வாழைப்பழம். ஒன்று இந்த வாழை இன்னொன்று என்று கேட்க நினைத்தவர்கள், கேட்க காத்திருப்பவர்களே...பதில் இன்னொன்றுதான் இது.

மா, பலா, வாழை இவை முக்கனிகள் என்று போற்றப்படுகின்றன. இதில் எளிதில் எல்லோருக்கும் கிடைப்பது வாழை. வாழைக்கு பல சிறப்பம்சங்கள் உண்டு. என்பது வழி வழியாக, தலைமுறை தலைமுறையாக தழைத்து நிற்கும் அம்சங்களை, வாழையடி வாழையாக தொடர்கிறது என்று நாம் சொல்கிறோம். மங்கலகரமான ஒரு பொருளாக வாழைப்பழமும், வாழைக்கன்றும் ஏன் முழு வாழைமரமுமேகூட பாவிக்கப்படுகிறது. நாசூக்காக, மதிநுட்பத்தோடு ஒருவர் குறிப்புணர்த்தி மற்றவருக்கு புரியவைத்தால் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல என்று நாம் சொல்கிறோம். வாசலில் வாழைமரம் கட்டிவிட்டால் அந்த வீட்டில் ஏதோ சிறப்பான கொண்டாட்டம் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. தண்டு முதல் தலை தொங்கி நிற்கும் இலை வரை முற்று முழுதாக மனிதனுக்கு பயனளிக்கும் ஒன்று இருக்கிறது என்றால் அது வாழை மட்டுமே.

ஆசியாவின் பல பகுதிகளில் சிறப்பாக தழைத்து வளரும் இந்த வாழை உலகத்திலேயே மிகச் சிறப்பான ஒரு பழம் என்று சொன்னால் அது மிகையில்லை. ஆனால் இந்த சிறப்பான வாழை தென்சீனாவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதுவரையிலும் எந்த பாதுகாப்புக் கவசமும் இல்லாமல், தவித்துக்கொண்டிருக்கிறது. வாழை புற்றுநோய் என்றழைக்கப்படும் ஒரு நோய் தென் சீனாவின் குவாங்சோ மற்ரும் குவாந்துங் மாநிலத்தில் இதர பகுதிகளிலான ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பு வாழைத்தோட்டங்களை நாசப்படுத்தியுள்ளது. பனாமா நோய் என்று அறியப்படும் ஒரு வகை பூஞ்சை நோய் வாழைகளை பாதித்து, புற்று நோயைபோல உருக்குலைத்து அழித்துக்கொண்டிருக்கிறது.

அடடா, இதென்ன கொடுமை நோய் கண்ட வாழை மரங்களின் பழங்களை நாமும் தெரியாமல் உண்டு, நமக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சத் தேவையில்லை. காரணம், இந்த பூஞ்சை தாக்கிய வாழைமரங்கள், தலை தொங்கி, சோர்வடைந்து செத்துபோகும். கனிதரும் பருவத்துக்கு முன்பாகவே இந்த நோய் ஏற்படுவதால், வாழைப்பழங்களில் இந்த பூஞ்சை இருக்குமோ என்ற அச்சம் தேவையில்லை.

வாழைக்கன்றுகளை கனிகொடுப்பதற்கு முன்பாகவே இந்த நோய் தாக்குவதால், மனிதர்கள் சாப்பிடும் வாழைப்பழங்களில் இந்த வாழைப்புற்று இருக்குமோ என்று அஞ்சத்தேவையில்லை என்கிறார், தென் சீன வேளான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சென் ஹவ்பிங். தென்கிழக்கு ஆசியாஅவில், குறிப்பாக இந்தோனேசியாவில் கடந்த அரை தசாப்த காலமாக வாழைத்தோட்டங்களை வெற்று நிலங்களாக்கிக் கொண்டிருக்கும் இந்த பூஞ்சை நோய், சரியான முறையில் கட்டுப்படுத்தாத பட்சம் சீனாவிலுள்ள வாழைத்தோட்டங்களையும் அழிக்கும் அபாயமும், அச்சுறுத்தலும் தற்போது உருவாகியுள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஒரு சில தசாப்தங்களில் வாழை என்ற ஒன்றே புவிப்பரப்பில் இல்லாமல் செய்யும் அளவுக்கு இந்த வாழை புற்றுநோய் என்ற பூஞ்சை நோயின் தீவிரம் இருக்கும் என்று சர்வதேச வல்லுனர்கள் பலர் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே இந்த நோய் சீனாவின் குவாங்சோவில் உள்ள 8667 ஹெக்டேர் நிலப்பரப்பின் 38.5 விழுக்காட்டு பரப்பிலான வாழைகளைத் தாக்கியுள்ளது. 1995ம் ஆண்டிலேயே இந்த நோய் குவாங்சோவில் இனம் காணப்பட்டுள்ளது.

குவாங்துங்கில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இதில் 5 விழுக்காட்டு வாழைத்தோட்டங்கள், இந்த பனாமா நோய் எனப்படும் வாழைப்புற்றை ஏற்படுத்தும் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் எச்சரிக்கை மணியடிக்கும் அம்சம் என்னவென்றால் பூஞ்சை பரவும் வேகம் வகை தொகையில்லாமல் அமையும் என்படுதான். அதாவது ஒரு வாழைத்தோட்டத்தில் முதலாண்டில் 5 விழுக்காட்டு பாதிப்பு ஏற்பட்டால், அடுத்த ஆண்டு அது 20 விழுக்காட்டு தோட்டத்தில் நிற்கும், அதற்கு அடுத்து 50 விழுக்காடு, அதாவது தோட்டத்தில் பாதியளவு பூஞ்சைக்கு இலக்காகி வீணாகும். 4 ஆண்டும், முழுத்தோட்டமும் பூஞ்சையால் தாக்கப்பட்டு ஒன்றுமில்லாமல் போகும். இப்படியாக சில கோடி வாழை மரங்களை இழந்துள்ள நிலையிலும் இந்த பூஞ்சைக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. சீனாவில் குவாங்துங் தவிர, ஃபூச்சியன், ஹைனான், குவாங்சி ஆகிய வாழைத்தோட்டங்கள் செறிந்த மாவட்டங்களிலும் இந்த வாழை புற்று பரவியுள்ளது. இந்த பூஞ்சை நிலத்தில் இருப்பது என்பதால், பாதிக்கப்பட்ட தோட்டங்களில் மீண்டும் இயல்பு நிலையை ஏற்படுத்துவது மிக மிகக் கடினம்.