• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-26 14:42:59    
சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் நிறுவனர்

cri

சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் நிறுவனர் பேரன் பியேர் டெ கூபெர்ட்டின் அவர்களின் உருவச் சிலை சியாமன் நகருக்கு வழங்கப்பட்டுள்ளது. சியாமன் நகரில் உள்ள சியாமன் விளையாட்டு மையத்தில் 1.55 மீட்டர் உயரமும் 1.3 மீட்டர் அகலமும் கொண்ட இந்த உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் நிறுவனர் கூபெர்ட்டின் தலையை மட்டுமே சிற்பமாக செதுக்கப்பட்ட இந்த உருவச்சிலை, சீனவைச் சேர்ந்த வாங் ஷாவ்ஜுன் மற்றும் வூ குவோஜுன் என்ற சிற்பிகளால் உருவாக்கப்பட்டது. பெய்சிங்கில் நடைபெற்ற விளையாட்டுத்துறை சார்ந்த சிற்பங்களின் பொருட்காட்சியில் முதல் பரிசு பெற்றது. அதன் பின் 1995ம் ஆண்டு முதலாக சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. சீன சிற்பிகள் உருவாக்கிய சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் நிறுவனரின் உருவச்சிலையை சீனாவுக்கே, குறிப்பாக சியாமன் நகருக்கே அளிப்பது, ஒலிம்பிக்கிற்கும் சீனாவுக்கும் இடையிலான தொடர்பை அடையாளப்படுத்தும் என்பதாக சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் தலைவர் ஜேகுவஸ் ரோக் கூறியுள்ளார்.