
இன்று, பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகள் வருவதற்கு முந்திய 500ம் நாளாகும். கடந்த சில நாட்களாக, பெய்சிங்கின் பல்வேறு துறையினர்கள் இந்நாளின் வருகை முன்னிட்டு, பல கொண்டாட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். "பெய்சிங் சர்வதேச நீண்ட நடை போட்டி" என்னும் நடவடிக்கையை, பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகள் அமைப்புக் கமிட்டி கடந்த 25ஆம் நாள் நடத்தியது. சுமார் பத்தாயிரம் பங்கெடுப்பவர்கள், நீண்ட நடை என்ற முறையில் இந்த 500ம் நாளை வரவேற்றனர். பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகள் அமைப்பு கமிட்டி, "சர்வதேச குடும்பங்களின் பெய்சிங் சுற்றுலா நடவடிக்கையின்" துவக்க விழாவையும் இன்று மேற்கொண்டது. இன்று பிற்பகல் capital அருங்காட்சியகத்தில் நடைபெறும் பெய்சிங் 2008 ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கம் பற்றிய கூட்டம், மேற்கூறிய நடவடிக்கைகளின் மைய பகுதிகளில் ஒன்றாகும். பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கங்களின் தனித்தன்மையையும், பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய ஒட்டுமொத்த கருத்துக்களுடனான அதன் தொடர்பையும் இக்கூட்டம் முழுமையாக காட்டுகின்றது. தவிரவும், இந்த 500ம் நாளைக் கொண்டாடும் வகையில், பெய்சிங் நகரின் பல்வேறு பிரதேசங்கள்-மாவட்டங்களிலும் ஒரு பகுதி சமூக நிறுவனங்களிலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
|