• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-27 14:16:24    
ஒரு சுவையான மீன் சூப்

cri

வாணி-- வணக்கம்.நேயர்களே, மீண்டும் சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி.

க்ளீட்டஸ்-- வணக்கம் நேயர்களே. வாணி இன்று எந்த வகை உணவை நேயர்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கின்றோம்?

வாணி-- கடந்த முறை ஒரு வகை பிரியாணியை நேயர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம். இன்று ஒரு சுவையான சூப் தயாரிப்பது பற்றி கூறுகின்றோம். எப்படி?

க்ளீட்டஸ்-- பிரியாணியுடன் சூப்பைச் சேர்ந்து சாப்பிட்டால் நல்லது.

வாணி -- ஆமாம். க்ளீட்டஸ் நீங்கள் அடிக்கடி காய்கறிச் சந்தைக்குப் போய்கிறீர்களா?

க்ளீட்டஸ்-- ஆமாம். நான் ஒரு வாரத்தில் சுமார் 2 முறை காய்கறிச் சந்தைக்கு போகிறேன். சந்தையில் வழக்கம் போல காய்கறிகளை வாங்குகிறேன். பேரங்காடியில் இறைச்சியை எப்போதாவது வாங்குவதுண்டு.

வாணி-- சீனாவில் பெரும்பாலோர் சைவ உணவு சாப்பிடுபவர்கள் இல்லை. எமது உணவுகளில் காய்கறி, இறைச்சி, beans வகைகள் அதிகம்.

க்ளீட்டஸ்-- மீன் வகைகளைச் சாப்பிட்டால், உடலுக்கு நல்ல பயன்.

வாணி-- ஆமாம். மீன் வகைகளும் அதிகம். இங்கே முக்கியமாக கடல் மீன் மற்றும் ஆற்று மீன் என மீன்கள் பிரிக்கப்படுகின்றன. இன்று நமது சூப்பிற்கு ஒரு வகை ஆற்று மீன் தேவைப்படுகின்றது. அதன் பெயர் crucian carp.

க்ளீட்டஸ்-- இது ஒரு சிறிய வகை மீன். நீங்கள் சந்தையில் வாங்க முடியாவிட்டால், வேறு வகை ஆற்று மீனைக் கொண்டும் சூப் தயாரிக்கலாம். 

வாணி-- தேவையானவற்றைத் தெரிவிப்பேன்.

crucian carp ஓன்று, சுமார் 200 கிராம்

உப்பு 3 கிராம்

கொத்த மல்லி சிறிதளவு

சர்க்கரை 20 கிராம்

வெங்காயம் 5 கிராம்

இஞ்சி 5 கிராம்

எண்ணெய் 50 கிராம்

சமையல் மது 4 கிராம்

க்ளீட்டஸ்-- வேறு காய்கறி தேவையா

வாணி-- வசதி இருந்தால் நறுக்கிய முள்ளங்கியைச் சேர்க்கலாம். 

வாணி--- சரி, செயமுறையை கூறுகிறேன்.
முதலில், மீனை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். மீனின் உள்ளே இருக்கும் பொருட்களையும் செதில்கள் எல்லாவற்றையும் நீக்க வேண்டும். ஆனால், இதன் தலையை நீக்கக் கூடாது.

க்ளீட்டஸ் -- ஏன்,

வாணி -- மீன்களின் மூளைப்பகுதி மனித உடலுக்கு நன்மை தரும். குறிப்பாக இதனை அடிக்கடி சாப்பிட்டால், குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு பயன் தரும்.

க்ளீட்டஸ் -- அப்படியா. நீங்கள் தொடர்ந்து குறிப்பைச் சொல்லுங்கள்.

வாணி-- இந்த மீனை தூய்மையாக்கிய பின், சிறிது நேரம் உலர வைக்க செய்ய வேண்டும். இதற்கு சுமார் அரை மணி நேரம் தேவை.

அடுத்து, வானலியை அடுப்பின் மீது வைத்து, 10 வினாடிக்குப் பின், சமையல் எண்ணையை ஊற்றி, காய்ந்த மீனை அதில் வைக்கவும். வைத்த பின், மீனை இடம்மாற்றக் கூடாது. இல்லை என்றால், இதன் தோல் நன்றாக பாதுகாக்கப்பட முடியாது.

சற்று பின்னர், இந்த பக்கம் பொன் நிறமாக மாறிய பின், மறு பக்கத்தை மாற்றி, பொன்னிறமாகும் வரை நன்கு பொறிக்க வேண்டும். பிறகு,
வாணலியிலிருந்து இதனை வெளியில் எடுக்கலாம்.

க்ளீட்டஸ் -- சூப் எங்கே.

வாணி -- விரைவில் வரும்.
மறு வாணலியில் அரை லிட்டர் நீர் ஊற்றி, வெந்நீர் தயார் செய்யுங்கள். பிறகு, இஞ்சி, வறுக்கப்பட்ட வெங்காயம், நறுக்கப்பட்ட முள்ளங்கி, ஆகியவற்றைக் கொட்டுங்கள். வறுக்கப்பட்ட மீனையும் இதில் போடவும். பின் சமையல் மது ஊற்றவும்.மிதமான சூட்டில், த உப்பு, காடி, சர்க்கரை, ஆகியவற்றைக் கொட்டவும்.

க்ளீட்டஸ்-- எத்தனை நிமிடம் இது கொதிக்க வேண்டும்.

வாணி -- சுமார் அரை மணி தேவை. சூப்பின் நிறம் படிப்படியாக வெள்ளையாக மாறிவிடும். கடைசியில், கொத்த மல்லியை சூப்பில் வைக்கலாம். இப்போது மீன் சூப் தயார்.

க்ளீட்டஸ்-- சுவையாக இருப்பதாக தோன்றுகின்றது.

வாணி -- நேயர்கள் வீட்டில் சமைத்து ருசி பாருங்கள்.