• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-27 16:51:22    
செல்லூர்.நா.சீனிவாசன் தெரிவித்த கருத்து

cri

திரு.சுந்தரன் அவர்களின் குரலில் உலா வந்த "மலர்ச்சோலை" நிகழ்ச்சி கேட்டோம். அதில் கடந்த ஆண்டு 54 லட்சம் மாணவர்கள் சீன பல்கலைக்கழகங்களில் தமது கல்வி அறிவை வளர்த்து வருகின்றனர் எனும் செய்தி எங்களின் செவியில் பாலை வார்த்தது,போல் இருந்தது. அதே சமயம் வியட்னாமில் பண்டைய இசையை பயன் படுத்தி பன்றியை வளர்த்து வருகின்றனர் எனும் செய்தியை மட்டும்; எங்களால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. தரமான படைப்புக்கு எஙகளின் மனமார்ந்த நன்றிகள் பல,அடுத்து பாண்டிச்சேரி பெ.சந்திரசேகரனின் கருத்து சீன பண்பாட்டு நிகழ்ச்சியில் "வூஷு" என்ற "குங்பு" எனப்படும் போட்டி நடக்க இருக்கும் இடத்தை பற்றியும், இந்த "ஊசு" போர் கலை எப்படி குங்புவாக மாறியது என்பதையும், இந்த கலையை அறிமுகப்படுத்தியவர் ஒரு இந்திய துறவி என்பதை நினைக்கும்போது இந்திய சீன நட்புறவே மேலோங்கி இருக்கிறது.

அடுத்து வளவனூர் முத்து சிவக்குமரன் பண்பாடு பற்றி தெரிவித்த கருத்து
சீனப் பண்பாடு பகுதியில் இரவு நேர உணவு உண்ணும் போது, சீனர்கள் தங்களின் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து தங்களுக்குள் அளவளாவிக் கொள்வார்கள் என்ற தகவல் குடும்பத்தில் அனைவருக்கும் இடையில் ஒரு நல்ல புரிந்துணர்வு ஏற்பட வழிவகுக்கும்.
அறிவியல் உலகம் பகுதியில் கூண்டுக்குள் குரங்குகளாய் என்ற தலைப்பில் கிளிட்டஸ் வழங்கிய தொகுப்பு சுவாரஸ்யமாக இருந்தது. அந்த சோதனைக்கு பிறகு, குரங்குகள் மனிதர்களாக மாறி விட்டனவா அல்லது மனிதர்கள் "வேறு மாதிரியாக" ஆகி விட்டார்களா எனபதை அவர் கூறவே இல்லையே?
.................. அடுத்து .திருச்சி அண்ணா நகர் வி.டி.இரவிச்சந்திரன் தெரிவித்த கருத்து
அறிவியல் உலகம் நிகழ்ச்சி மனிதர்களின் எண்ணங்களை அறிவது பற்றி மூளை குறித்து பல அரிய அறிவியல் தகவல்களை வழங்கியது. 'ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது என்பதடா என்ற தமிழ் திரைப்படப்பாடலில் மனிதர்களில் எத்தனை குணம் படைத்தவர்கள் உள்ளனர் என்பதை அறியத் தரும். மனிதர்களை பகுத்தாய்து அவர்களை இனங்கண்டு எவர், எவர் எத்தகைய குணம் படைத்தவர்கள் என்பதை சிலர் மட்டுமே சில நாட்களில், சில மணி நேரத்திலும் கண்டுவிடுகின்றனர். பலர் பல நாள் பழகியும் பிறரது குணாதிசயத்தையும் எண்ணத்தையும் அறிய முடியாமல் அலையில் மாட்டித் தவிக்கும் படகு போல தவிக்கின்றனர். நிகழ்ச்சியில் கூறப்பட்டது போல மனிதர்களின் எண்ணங்களை அறிந்து கொள்ள நமது மூளைக்கு அபார சக்தியுண்டு. உண்மையில் இது ஒரு தனிக் கலைதான். இதில் கைதேர்ந்தவர்கள்தான், மக்கள் அதிகம் கூடும் தொழில்களில் பிரசித்தம் பெற்றுவிடுகின்றனர்.

அடுத்து பாண்டிசேரி பெ.சந்திரசேகரனின் மின்னஞ்சல் கருத்து
சீனாவில் வளர்ந்து வரும், வரவேற்க்கப்பட்டு வரும் சிக்கனரக ஒட்டல்களை பற்றிய தகவல்களை மிக விரிவாக கூறினார்கள். பெரிய ஒட்டல்களில் சென்று தங்கவும், சாப்பிடவும் முடியவில்லையே என்று நினைக்கும் சாதாரண மக்களின் கனவை நனவாக்கும். இதுபோன்ற சிக்கனரக ஒட்டல்கள் பெரிதும் உதவும். நானும் இது போன்ற மக்களுக்கு பயன் அளிக்கக் கூடியவை. ஒரு சில செய்திகள், எந்த பத்திரிக்கையில் பார்க்காத செய்திகளாகவே உள்ளன. பொது அறிவை வளர்க்கும் வகையில் நிகழ்ச்சி தயாரிக்கும் சுந்தரன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அமெரிக்க பிர்நாண்ட் ஆல்பெர்ட்
நீரின்றி மண்ணில் உயிர் இல்லை;
மண்ணின்றி நீருக்கும் பயனில்லை!
வாழ்வின் அமுதம் நீர்! மனித உடம்பில்
7.2 லிட்டர் தண்ணீர்! 70 சதம் தண்ணீர் மனிதன்!
உணவில்லாமல் ஒருமாதம் வாழலாம்!
நீர் குடிக்காமல் ஒருவாரம் உயிரோடு இருக்கமுடியாது!
இயற்கையின் சீதனமாக நமக்குக் கிடைத்த இந்த நீரை
வீணாக்காமல் செலவழிக்கவேண்டும்! காய்கறி கழுவிய நீரை
வீட்டுக் காய்கறிச் செடிகளுக்கு பயன்படுத்தலாம்! வீட்டுப் புழக்கடையில்
துணிதுவைக்க, குளிக்கப் பயன்படுத்தும் நீரை வீட்டுத் தோட்டத்திற்கு
சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்!

 
ஆண்டுக்கு ஒருவருக்கு 1,700 கனமீட்டர் தண்ணீர் தேவை!
இதைவிடக் குறைவாகக் கிடைத்தால் அந்த நாடு நீர்வளம் குன்றிய நாடாகும்
என்று புள்ளிவிபரங்கள் கூறுகிறது! அதனால் நீர்வளத்தை சேமிப்போம்!
நீராதாரம் பெருக்குவோம்! நீர்வளத்தைச் சிக்கனமாகப் பாவிப்போம்!
மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்தபொறுப்பு உண்டு என்பதை இந்நாளில் நினைவில் நிறுத்துவோம்.