• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-27 17:05:35    
இரண்டாவது உலகப் பாரம்பரிய வூ ஷு சாம்பியன் போட்டிகள்-ஓர் அறிக்கை

cri

இரண்டாவது உலகப் பாரம்பரிய வூ ஷு சாம்பியன் போட்டிகள் அக்டோபர் 16 முதல் 19ஆம் நாள் வரை, நான்கு நாட்கள் ஹெனான் மாநிலத் தலைநகரான ஜெங்ஷோ (Zheng Zhou) நகரில் நடைபெற்றது. குங்பூஃ என்னும் போர்க்கலை தான் சீன மொழியில் வூ ஷு என அழைக்கப்படுகிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கதைகளை ஏந்தியபடி ஆர்ப்பரித்துப் பாய்ந்து வளம் சேர்க்கும் தாய்நதியான மஞ்சள் ஆறு சீன மக்களுக்கு விட்டுச் சென்ற பல அளப்பரிய செல்வங்களில் ஒன்று தான் வூ ஹு போர்க்கலை.


இந்தக் கலையைத் தோற்றுவித்தவர் தர்மபாலர் என்னும் இந்திய பெளத்தத் துறவி. அவரைச் சீனர்கள் தாமோ முனிவர் என்றழைக்கின்றனர். கி. பி. 495ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஷாவோலின் ஆலயத்திற்கு 527ஆம் ஆண்டில் சீனாவுக்கு வந்த தாமோ முனிவா, புத்தமதத் துறவிகள் ஆழ்நிலைத் தியாளம் புரிவதற்கு நன்கு வலுவான உடல் தேவை என்று கருதி, துறவிகளுக்கு இந்தப் போர்க்கலையைக் கற்பித்தார். தாங் வமிசப் பேரரசர் லி ஷிமின் என்பவரின் உயிரை இந்தத் துறவிகள் காப்பாற்றியதால், அவர்களுக்கு பல பட்டங்களையும் பதவிகளையும் வழங்கிய பேரரசர், துறவிகள் சேனை ஒன்றையும் ஏற்படுத்தினார். அது நாள் முதல் பாரம்பரிய வூ ஹு பற்பல வடிவங்களில் வளர்ந்து புகழ் பெறத் தொடங்கியது.
1500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுப் பெருமையுடைய வூ ஷு போர்க்கலையை அகிலமெங்கும் பரப்பும் நோக்குடன், 1991 முதல் ஜெங்ஷோ நகர நிர்வாகம் ஏழு சர்வதேசப் போட்டிகளையும், இரண்டு உலக சாம்பியன் போட்டிகளையும் நடத்தி முடித்துள்ளது. முதலாவது உலக வூ ஷு சாம்பியன் போட்டிகள் கடந்த 2004ஆம் ஆண்டில் நடத்தப்பட்டன. தற்போது நடந்து முடிந்துள்ள இரண்டாவது உலக சாம்பியன் போட்டிகளில் 66 நாடுகள் மற்றும் வட்டாரங்களில் இருந்து, 172 அணிகளைச் சேர்ந்த ஈராயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.


"வூஷு மூலம் நண்பர்களைப் பெற்று, சேர்ந்து முன்னேறுவோம்" என்ற முழக்கத்துடன் நடத்தப்பட்ட இரண்டாவது உலக பாரம்பரிய வூ ஷு சாம்பியன் போட்டிகள், சர்வதேச வூ ஷு சம்மேளனம் மற்றும் சீன வூ ஷு சம்மேளனத்தின் ஏற்பாட்டில், ஹெனான் மாநில விளையாட்டுக் கழகத்தாலும் ஜெங்ஷோ மாநகராட்சி மக்கள் அரசாலும் சீரும் சிறப்புமாக நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளின் தொடக்கவிழா அக்டோபர் 17 அன்று காலையில் ஹெனான் விளையாட்டு மையத்தில் கோலாகலமாக நடைபெற்றது. 

 நாடுகள் மற்றும் வட்டாரங்கள் வாரியாக அணிகள் அணிவகுத்து வந்தன. ஜெங்ஷோ நகர மேயரும், ஏற்பாட்டுக் கமிட்டித் தலைவருமான Zhao Jian Cai வரவேற்புரை ஆற்றினார். சர்வதேச வூ ஷு சம்மேளனத்தலைவர் Yu Zai Qing தொடக்க உரை ஆற்றினார். சீனத் தேசிய மக்கள் பேரவைத் துணைத் தலைவர் Lie Tie Ying இரண்டாவது உலகப் பாரம்பரிய வூ ஷு சாம்பியன் போட்டிகளைத் துவக்கி வைத்தார். 
CCTVயின் புகழ் பெற்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளர் Wu Nan, தொடக்க விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார். சீன மக்களிடையே பிரபலமான பாடகர்களும் இசைக் கலைஞர்களும் கலை விருந்து படைத்தனர்.