• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-27 17:20:46    
சீனாவில் கல்வித் துறையின் வளர்ச்சி

cri

தற்போது, இணையம் மூலம் தொலைக்கற்றல் என்னும் நெடுங்தூர கல்வியில் புகழ்பெற்ற ஆசிரியர்களின் பாடத்தைக் கேட்கும் தொலைவில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. வறிய மாணவர்கள் நடு நிலை தொழில் கல்வி பெறுவதற்கான கல்வி உதவி கடன் வாங்க விண்ணப்பம் செய்யலாம். 2007ஆம் ஆண்டு முதல் பாட நூல் கட்டணம் மட்டும் செலுத்தினால், கிராமப்புறத்தில் வாழும் மாணவர்கள் துவக்கம் முதல் ஜுனியர் இடை நிலை பள்ளி வரை கல்வி பெறலாம். கல்வி துறையிலான நியாயத்தை முன்னேற்றும் வகையில், சீனக் கல்வி வாரியங்கள் முழுமூச்சுடன் பாடுபடுவதைப் பள்ளி வளாகங்களில் நிகழ்ந்த இந்த மாற்றங்கள் காட்டுகின்றது.
Sun Qiao Yun என்பவர், நின் சியா ஹுய் இனத் தன்னாட்சி பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஆவார். தற்போது அவருடைய மகன் ஒரு சாதாரண இடை நிலை பள்ளியில் பயில்கின்றார். முன்பு, வறிய நிலைமையினால், அவர் தனது மகனைக் கல்வியைக் கைவிடக் கோர எண்ணினார். அவர் கூறியதாவது,

முன்பு, ஒரு கல்வி காலத்தவணையில் 120 யுவான் செலவிட வேண்டும். எனது குடும்பத்தில் வறுமை. அதிகமான கட்டணம் செலவிட இயலாது. இப்போது, கட்டணம் நீக்கப்பட்டது. பள்ளியும் ஆசிரியரும் எனது மகனை பள்ளியில் மீண்டும் சேரச் செய்தனர் என்றார்.
இந்தப் புதிய கொள்கை கடந்த ஆண்டு வசந்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்படத் துவங்கியது. பொருளாதாரம் அவ்வளவாக வளர்ச்சி அடையாத மேற்கு பகுதியிலான கிராமப் பிரதேசத்தில் கட்டாய கல்வி கட்டத்தில் உள்ள மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு நீக்கியுள்ளது. இந்தக் கொள்கை 5 கோடிக்கும் அதிகமான கிராம மாணவர்களுக்கு பயன் தருகின்றது. ஒரு கல்வி காலத் தவணையில் ஒரு நூறு, 2 நூறு யுவான் கட்டணம், செல்வந்து குடும்பங்களைப் பொறுத்த வரை சுமை அல்ல. ஆனால், வறிய குடும்பங்களைப் பொறுத்த வரை, பெரிய சுமை ஆகும். இவ்வாண்டு முதல், சீனாவிலான அனைத்து கிராம மாணவர்களும் இந்தக் கொள்கையால் பயன் பெறலாம். இனிமேல், துவக்க நிலை மற்றும் ஜுனியர் இடைநிலை பள்ளிகளில் அவர்கள் கல்வி கட்டணம் செலுத்த வேண்டாம்.

இருந்த போதிலும், நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையில் பொருளாதார வளர்ச்சி மிகவும் சமநிலையில்லா நிலைமையில் இருக்கும் போது, சீரான கல்வி வளத்தை அனைவரும் அனுபவிக்க செய்வது எளிதல்ல. சீனாவில் இணக்கமான சமூகத்தை உருவாக்குவதென்ற இலக்கு அண்மையில் நடைபெற்ற சீன கம்யூனிஸ் கட்சியின் 16வது மத்திய கமிட்டியின் 6வது முழு அமர்வில் முன்வைக்கப்பட்டது. குடி மக்கள் நியாயமான கல்வி வாய்ப்பை அனுபவிப்பதற்கு உத்தரவாதம் அளிப்பது என்பது இதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். கல்வி தொகையை மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் 4 விழுக்காடாக அதிகரிக்க அரசு முயற்சி செய்கின்றது. புதிதாக அதிகரிக்கப்பட்ட கல்வி தொகை முதலில் கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படும். இதன் மூலம், கிராமப்புறத்தில் வாழும் குழந்தைகளுக்கு மேலும் சிறப்பாக கல்வி வழங்க முடியும் என்று சீனக்கல்வி துறை அமைச்சர் சோ ச்சி கூறினார். அவர் கூறியதாவது,

 
2006ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை, கிராமப்புறக் கட்டாய கல்வி தொகை 20 ஆயிரம் கோடி யுவானை அதிகரிக்கக் கூடும் என்றார்.
தற்போது, அனைத்து பிரதேசங்களின் உண்மை நிலைமை, தனிச்சிறப்பு ஆகியவற்றுக்கிணங்க, பல்வேறு இடங்களின் தொடர்புடைய வாரியங்கள் கல்வி தொகையை அதிகரிக்க முயன்று வருகின்றன. எடுத்துக்காட்டாக, நின்சியா ஹுய் இன தன்னாட்சி பிரதேசத்தில், கட்டாய கல்வி கட்டத்திலான கல்வி கட்டணத்தை நீக்குவதன் அடிப்படையில், உள்ளூர் அரசு 5 இலட்சத்து 30 ஆயிரம் வறிய கிராம குடும்பத்து மாணவர்களுக்கு இலவச பாட நூல்களை வினியோகித்து, விடுதியில் தங்கி வாழும் 70 ஆயிரம் வறிய மாணவர்களுக்கு வாழ்க்கைச் செல்வினங்களுக்கு நிதி தொகையை வழங்கியுள்ளது.