மேற்கு சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில், சதுப்பு நிலங்களின் மொத்த நிலப்பரப்பு, 60 லட்சத்துக்கு அதிகமான ஹெக்டரை எட்டியுள்ளது. நாடு முழுவதிலும், இது முதலிடம் வகிக்கின்றது. திபெத்தின் சதுப்பு நிலங்களில், இயற்கை சதுப்பு நிலங்கள் பெரும்பாலாக காணப்படுகின்றன. திபெத்தின் நிலப்பரப்பில் இது, சுமார் 4.9 விழுக்காடாகும். இவ்வாண்டு முதல், சதுப்பு நிலத்தை மேலும் பயன்தரும் முறையில் பாதுகாக்க, சீன அரசவை அங்கீகரித்த "நாடு தழுவிய சதுப்பு நிலப் பாதுகாப்பு திட்டப்பணி பற்றிய நடைமுறையாக்கத் திட்டத்தில்" திபெத்தின் 8 சதுப்பு நில இயற்கை பாதுகாப்பு மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தவிர, திபெத்தின் தலைநகர் லாசாவின் சுற்றுப்புறங்களில் உள்ள 6 சதுப்பு நில பாதுகாப்பு மண்டலங்கள், இத்திட்டத்தில் சேர ஆக்கப்பூர்வமாக விண்ணப்பிக்கின்றன.
|