• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-28 18:02:40    
திபெத்தின் மக்கள் தொகை

cri
கடந்த ஆண்டின் இறுதி வரை, திபெத்தின் மொத்த மக்கள் தொகை, 28 லட்சத்து 10 ஆயிரமாகும். இது, 2005ஆம் ஆண்டில் இருந்ததை விட 40 ஆயிரத்தை அதிகரித்துள்ளது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் புள்ளி விபர அலுவலகம் அண்மையில் வெளியிட்ட புதிய புள்ளி விபர அறிக்கை இதை சுட்டிக்காட்டுகின்றது.
சீனாவின் மாநில நிலை நிர்வாக பிரதேசங்களில், திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் மக்கள் தொகை மிகவும் குறைவு. திபெத்தின் மொத்த நிலப்பரப்பு, 12 லட்சத்துக்கு அதிகமான சதுர கிலோமீட்டராகும். இது, நாட்டின் மொத்த நிலப்பரப்பில் எட்டில் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு சதுர கிலோமீட்டர் நிலத்தில், ஆள் எண்ணிக்கை, மூன்றுக்குட்பட்டதாகும். திபெத்தில், திபெத் இனத்தைத் தவிர, பத்துக்கு அதிகமான சிறுபான்மை தேசிய இனங்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்கின்றன.
கடந்த 50க்கு அதிகமான ஆண்டுகளாக, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில், திபெத் இனத்தின் மக்கள் தொகை, ஒரு மடங்கு அதிகரித்துள்ளது. சராசரி ஆயுள் காலம், 35.5 வயதிலிருந்து தற்போதைய 67 வயது வரை உயர்ந்துள்ளது.