• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-28 09:39:51    
குற்றச்சாட்டு

cri

நம் ஊரில் ஆட்டுச் சண்டை, கோழிச் சண்டை போல, சீனாவில் பூச்சிச் சண்டை மிகவும் பிரபலமானது. வசந்தகாலத்தில் பெரிய பெரிய விட்டில் பூச்சிகளைப் பிடித்து, கூண்டில் அடைத்து வைத்து பொது இடத்தில் சண்டைக்கு விடுவார்கள். ஒன்றை ஒன்று ஆக்ரோஷமாக முட்டி மோதிக் கொள்ளும். இதை வட்டமாக மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.

ஜிங் தேசத்து அரசனும் இப்படி விட்டில் பைத்தியமாக இருந்தான். தனது தேசத்தில் உள்ள அனைவரும் ஆளுக்கு ஒரு ஜோடி விட்டில் பூச்சிகளைப் பிடித்து வர வேண்டும் என உத்தரவிட்டான். ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நோயாஓளி. மரத்தில் ஏறி விட்டில் பிடிக்க அவனுக்கு உடம்பில் தெம்பில்லை. எப்படியோ படாதபாடுபட்டு, மரத்தில் இருந்து தவறிவிழுந்த ஒரு விட்டிலை வீட்டுக்குக் கொண்டு வந்து வீட்டில் வைத்தான். ஆனால் அது அவனைப் போல நோஞ்சான். ஒரு ஜோடி விட்டில் வேண்டுமே! என்ன செய்வது? அவனுடைய மனைவி ஊரெல்லாம் சுற்றி கொஞ்சம் பெரிய விட்டிலைக் கொண்டு வந்தாள். அது அவனைப் போல கொஞ்சம் முரட்டு விட்டில். இரண்டையும் ஒரு கூட்டில் அடைத்துவிட்டு, இரவில் தூங்கப் போனார்கள். மறுநாள் காலையில் கூண்டை திறந்தால் நோஞ்சான் விட்டில் செத்துக் கிடந்தது. "என் உடல் வலிமையைப் பார்த்தாயா?" என்று தோள் தட்டியபடியே முரட்டு விட்டில் சுற்றிச் சுற்றி வந்தது. உடனே கோபம் கொண்ட மனைவி அதை விரட்டி விட்டாள்.

"ஐயோ! இப்படி பண்ணிட்டியே மன்னர் கிட்ட இன்றைக்கு கொண்டு போய் விட்டிலைச் சேர்க்கணுமே" என்று கணவன் புலம்பினான். மனைவிக்குத் தகவல் தெரிந்ததும் "அப்படியா சேதி? அவனைத் தலையை வெட்டுங்க" என்று உத்தரவிட்டாள். உடனே அமைச்சர் குறுக்கிட்டு, "மன்னரே அவசரப்படாதீங்க. நாயைக் கொல்வதானாலும் விசாரிக்காம கொல்லக் கூடாது என்பது ராஜ நீதி. முதலில் நான் அவன் மீது குற்றப்பத்திரிக்கை வாசிக்கிறேன். அப்புறம் கொல்லலாம்" என்றார்.
விட்டில் பிடிக்க முடியாத நோஞ்சான் அரசவைக்கு இழுத்து வரப்பட்டான். அமைச்சர் குற்றச்சாட்டுக்களை அடுக்கத் தொடங்கினார்.

"நீ நம்ம மன்னருக்கு விட்டில் பூச்சிகளைப் பிடித்துத் தரணும். ஆனால் அதைப் பறந்து போக விட்டுடே. இது உன்னுடைய முதலாவது குற்றம். பூச்சி தம்பிச்சுப் போனதினாலே ஒரு மனிதனுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டிய இக்கட்டான நிலைமையிலே நீ நம்ம மன்னரை வைச்சுட்டே. இது இரண்டாவது குற்றம். இதைப் பற்றி பக்கத்து தேசத்து மன்னர்கள் கேள்விப்பட்டால் நம் மன்னரைப் பற்றி என்ன நினைப்பார்கள்? என்ன இந்த மன்னன் மனிதனுடைய உயிரைவிட பூச்சிகள் இவனுக்கு பெரிசாப் போச்சா, என்னு இனக்காரமாக நினைக்க வைத்து விட்டாய். இது உன்னுடைய மூன்றாவது குற்றம்."

இவ்வாறு குற்றச்சாட்டுக்களை கூறிவிட்டு, "அரசே! இனி இவனுக்கு மரணதண்டனை விதிக்கலாம்" என்றார். உடனே மன்னன்.

"வேண்டாம். இவனைக் கொல்லக் கூடாது" என்று கூறிவிட்டு, மன்னிப்பும் கேட்டு கொண்டான்.