• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-28 09:54:33    
ச்சாஞ்சோ நகரின் தைவான் வணிகர்களின் கதைகள்

cri

Tsann Kuen குழுமம்

Tsann Kuen குழுமம், ச்சாஞ்சோ நகரின் தைவான் விவகார அலுவலத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. இக்குழுமத்தின் தலைமை இயக்குநர் Wu Tsann Kuen பலமுறை குறிப்பிடுகையில், உலகின் பல இடங்களில் தனது குழுமம் முதலீடு செய்துள்ளது. ஆனால், ச்சாஞ்சோ நகரின் அரசு பணியாளர்கள் மிகவும் சிறந்தவர்கள் என்று தெரிவித்தார். தைவான் வணிகர்களின் விஷயத்தை தனது விஷயமாகக் அவர்கள் கருதுகின்றனர் என்றார் Wu Tsann Kuen. தைவான் விவகார அலுவலகத்துடன் பழகும் உணர்வை அவர் கொண்டுள்ளார். இது மட்டுமல்ல, தைவான் Jia Zhong வேளாண் அறிவியல் தொழில் நுட்பக் கூட்டு நிறுவனத்தின் செயல் தலைமைப் பொறுப்பாளர் Wang Zhen Luவும் இப்பணியகத்தை பாராட்டினார். அவர் கூறியதாவது: 

"தைவான் விவகார அலுவலகத்தின் செயல்பாட்டை நான் மிகவும் ஒப்புக்கொள்கின்றேன். ஏதாவது பிரச்சினை சந்தித்தால், அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று உதவியை நாடுகின்றேன்" என்றார், அவர்.

பரிமாற்றம் நடவடிக்கை

ச்சாஞ்சோ நகரின் தைவான் விவகார அலுவலகத்தின் தலைவரான, Zhou Yue Hong பேசுகையில், அலுவலகத்தில் 6, 7 பேர் மட்டுமே இருந்த போதிலும், தைவான் உடன்பிறப்புகளின் விஷயங்களை கையாளும் போது, தனியார் அல்லது தொழில் நிறுவனங்களின் விஷயங்களைத் தீர்ப்பதற்கு அவர்கள் தன்னால் இயன்றதனைத்தையும் செய்கின்றனர் என்றார். 2005ஆம் ஆண்டு தைவான் வணிகருக்கான நேரடித் தொடர்பு தொலைபேசி தொடங்கிய பின், நூற்றுக்கு அதிகமான பல்வகை பிரச்சினைகளை தைவான் வணிகர்களுக்காக இவ்வலுவலகம் தீர்த்துள்ளது என்றார். தைவான் வணிகர்களுக்கான உதவி பற்றி அவர் கூறியதாவது:

"சில ஆண்டுகளுக்கு முன், ச்சாஞ்சோ நகரில், வேளாண் பொருட்களின் பதனீட்டுத் தொழிலில் ஈடுபடும் தைவான் வணிகர்கள் அதிகம். ஆனால், தொழில் நுட்பத் தடையையும் இறக்குமதி வரையறையையும் ஜப்பான் உயர்த்திய பின், உணவுப் பொருள் பதனீட்டுத் தளங்கள், குறிப்பாக பழம் மற்றும் காய்கறி பதனீட்டுத் தளங்களின் உருவாக்கத்தில் அவர்களுக்கு உதவி அளித்தோம். ரசாயன உரத்தின் மிச்சச்சொச்சத்தைக் குறைப்பதில் அவர்களுக்கு வழிகாட்டுகின்றோம். இதன் மூலம், அவர்களின் வணிகப் பொருட்கள் தடங்கலின்றி ஜப்பானுக்குள் ஏற்றுமதி செய்யப்பட்டன" என்றார் அவர்.

உண்மையில், Daffodils, ச்சாஞ்சோ நகரின் மிக புகழ் பெற்ற வேளாண் பொருளாகும். தற்போது, ச்சாஞ்சோ நகரும் தைவானும் மேற்கொள்ளும் மிகப் பெரிய ஒத்துழைப்பு நிகழ்ச்சி. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் "தைவான் நீரிணையின் இரு கரை மலர் கண்காட்சி மற்றும் வேளாண் ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை"யாகும். ச்சாஞ்சோ நகரின் தைவான் விவகார அலுவலகம், Fu Jian மாநிலம் மற்றும் ச்சாஞ்சோ நகரின் கூட்டு முயற்சியுடன், இது வரையிலும் இக்கண்காட்சி 8 முறை நடைபெற்றது. மொத்தம் 4 ஆயிரத்துக்கு அதிகமான தொழில் நிறுவனங்கள், 8 ஆயிரத்துக்கு கூடுதலான தைவான் வணிகர்கள் மற்றும் அன்னிய வணிகர்களை இந்நிகழ்ச்சி ஈர்த்துள்ளது. 100 கோடிக்கு அதிகமான அமெரிக்க டாலர் மதிப்புள்ள அன்னிய முதலீட்டை இது ஈர்த்துள்ளது. சீன அரசவையின் தைவான் விவகார அலுவலகத்தின் துணைத் தலைவர் Zheng Li Zhong, மலர் கண்காட்சியை வெகுவாக பாராட்டினார். அவர் கூறியதாவது: 

"பொருளாதாரத்தில் இரு கரைகளின் தொழில்கள் ஒன்றின் குறையை மற்றது நிறைவு செய்வதை இக்கண்காட்சி ஊக்குவித்து, இரு கரை உடன்பிறப்புகளின் உணர்வுத் தொடர்பு, பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளது" என்றார்.
நேயர்கள், இது வரை "ச்சாஞ்சோ நகரின் தைவான் விவகார அலுவலகம்" என்பது பற்றி கேட்டீர்கள். இத்துடன், சீன சமூக வாழ்வு நிகழ்ச்சி நிறைவடைகிறது.