• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-29 16:42:31    
குறைவான மக்கள் தொகையுடைய தேசிய இனங்களின் வளர்ச்சியைத் தூண்டுவது

cri

Dainzhub Ongboin

குறைவான மக்கள் தொகையுடைய தேசிய இனங்களின் வளர்ச்சியை ஆதரிக்க, உதவித்தொகையை சீனா அதிகரிக்கும் என்று சீனத் தேசிய இன விவகாரக் கமிட்டியின் துணை தலைவர் Dainzhub Ongboin தெரிவித்துள்ளார்.
இன்று அரசவைச் செய்தித்துறை அலுவலகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், இவ்வாண்டு முதல், குறைவான மக்கள் தொகையுடைய தேசிய இனங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில், அரசு ஆண்டுக்கு 7 கோடி யுவான் தொகையை அதிகரிக்கும் என்றார். உறைவிட வசதி, வேலை வாய்ப்பு, உற்பத்தி, வாழ்க்கை உள்ளிட்ட துறைகளில், இந்த தேசிய இனங்களை சீனா ஆதரிக்கும் என்றும், இத்தேசிய இனங்கள் வாழும் பிரதேசங்களில், பாதை, செய்தித்தொடர்பு உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்க பாடுபடும் என்றும் அவர் கூறினார்.
சீனாவில் குறைவான மக்கள் தொகையுடைய 22 தேசிய இனங்கள் வாழ்கின்றன. அவற்றின் மொத்த மக்கள் தொகை, 6 லட்சத்து 30 ஆயிரமாகும்.