• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-29 15:07:10    
6 சிறுபான்மை இன மொழிகளை அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய கணினி முறைமை

cri

சீனாவில் 6 சிறுபான்மை இன மொழிகளை அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய கணினி முறைமை வெற்றிகரமாக உருவாக்கப் பட்டுள்ளது. இந்தக் கணினி முறையானது, சீன மற்றும் ஆங்கில மொழி ஆவணங்களை அடையாளம் கண்டு கொள்வதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. சீனாவின் 6 சிறுபான்மை இன மொழிகளான மங்கோலிய, திபெத், உய்கூர், கசாக், கொரிய மற்றும் கிர்கிஸ் மொழி ஆவணங்களையும் சீன மற்றும் ஆங்கில மொழி ஆவணங்களையும் ஒருங்கிணைந்த முறைமை ஒன்றில் தொகுத்து, கணினியில் ஏற்ற இந்தக் கண்டுபிடிப்பு துணைபுரிகிறது. இந்தக் கண்டுபிடிப்பால், இந்த 6 சிறுபான்மை இன மொழிகளின் காகித வெளியீடுகளை மின்னணு வெளியீடுகளாக மாற்ற, செயற்கை முறையில் தட்டச்சு செய்யத் தேவையில்லை. அச்சு ஆவணங்களை scan செய்து கணினியில் பதிவு செய்தால் போதும்.

கைப்பேசியால் காப்பாற்றப்பட்ட தாயும் சேயும் வியட்னாமின் ஹோசிமின் நகரின் மருத்துவ மனை ஒன்றில் குழந்தை பிறக்கவுள்ள ஒரு பெண்மணிக்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த போது திடீரென்று மின்சார நிறுத்தம் ஏற்பட்டது. சிகிச்சை அறையில் ஒரே கும்மிருட்டு. இந்த நெருக்கடித் தருணத்தில், மருத்துவர்களும் செவிலியர்களும் 8 கைப்பேசிகளைத் திரட்டி எடுத்து வந்தனர். இந்தக் கைப்பேசித் திரைகளிலான ஒளியின் துணையைக் கொண்டு, மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர். மருத்துவர்களின் சமயோசிதப் புத்தியினால் தாயும் சேயும் காப்பாற்றப்பட்டனர்.

பிரிட்டனில் 10 வயது நீதிபதி தகாத நடத்ததைகளால் சமூகத்துக்கு விளையும் தீங்கை அறிந்து கொள்ள, இளைஞர்களுக்கு உதவும் வகையில், பிரிட்டனின் புரிஸ்டன் நகரில், 10 வயது நிரம்பிய குழந்தைகள் நீதிபதியாக வழக்கு விசாரிக்கும் திட்டம் ஒன்று வகுக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, 10 வயது முதல் 17 வயது வரையிலான மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கு புரிஸ்டன் நகராட்சி 4 லட்சத்து 87 ஆயிரம் பவுண்டு தொகையை ஒதுக்கியுள்ளது. குடிவெறியினால் ஏற்படும் நடத்தைக்கேடு, வலுவற்றவர் மற்றும் சிறுவரை இம்சிப்பது, பொது உடைமைகளைச் சீர்குலைப்பது என்பன போன்ற சிறு வழக்குகளை இந்த இளைஞர்கள் முக்கியமாக விசாரிப்பார்கள். இளைஞர்கள் ஒத்த வயதானவர்களின் நிர்ப்பந்தத்துக்குள்ளாகும் போது, தமது கெட்ட நடத்தைகளைத் திருத்த விரும்புவர் என்பது, இத்திட்டத்தின் தத்துவ ஆதாரமாகும்.