• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-02 09:13:16    
ஒலிம்பிக் செய்திகள்

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அமைப்புக் குழுவின் துணை தலைவர் லிபிங்கு சீன வானொலி நிலையத்தின் செய்தியாளருக்குப் பேட்டி அளித்த போது, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அமைப்பு குழு, முழு உலக வீராதிவீரர்களும் சிறந்த சாதனை சாதிப்பதற்கு தரமிக்க பின்னணிச் சேவைகளை வழங்கும் என்று கூறினார். தற்போது, ஒலிம்பிக் போட்டிக்கான ஆயத்தப் பணிகள் திட்டப்படி தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நீண்டகாலமாக பெய்ஜிங்கைப் பாதித்திருக்கும் போக்கு வளரத்து நெரிசல், காற்று மாசுபடுவது ஆகிய பிரச்சினைகள் பொது போக்குவரத்தை ஊக்குவித்து வளர்ப்பது மற்றும் வேறு சில நிர்வாக நடவடிக்கைகள் மூலம் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருகின்றன. தலைநகர் இரும்புருக்கு நிறுவனம் இடம் பெயர்ந்தது, ஒரு தொகுதி காற்று மாசுபடுத்திய நிறுவனங்களை மூடுவது ஆகியவற்றால் பெய்ஜிங்கின் காற்று தரம் பெரிதும் மேம்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அமைப்புக் குழு, மார்ச் 27ம் நாள் 29வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான பதக்கங்களின் வடிவமைப்புத் திட்டத்தை வெளியிட்டது.

வடிவமைப்பு திட்டத்துக்கு இணங்க, இப்பதக்கங்கள் 70 மில்லிமீட்டர் விட்டமும் 6 மில்லிமீட்டர் தடிப்பும் உடையவை. அவற்றின் பின் பக்கத்தில் ஜேட் மணிக்கல் பதிக்கப்படுகிறது. இது, வரலாற்றில் மிக புதுமையான வடிவமைப்பாகும்.