• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-29 15:56:51    
நாட்டுப்புற தனியார் அருங்காட்சியகத்தொகுதி

cri

சியான் சுவான் அருங்காட்சியகங்களில் திரட்டப்பட்ட காட்சிக்கான பொருட்களின் எண்ணிக்கை, 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அவற்றின் வகை, காலம் முதலியவற்றுக்கு ஏற்ப, மூன்று பகுதிகளாக இப்பொருட்கள், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. முதலில், 2வது உலக போர் காலத்தில் சீனாவில் நிலவிய நினைவுப் பொருட்கள். இதில், அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், ஆடைகள், கடிதங்கள், ஆவணங்கள், நிழற்படங்கள் முதலியவை இடம்பெறுகின்றன. இரண்டாவது பகுதியில், பீங்கான், பதக்கம், பிரச்சார படங்கள் உள்ளிட்ட கலைப்பொருட்கள். அவை எல்லாம், 1966ம் ஆண்டு முதல், 1976ம் ஆண்டு வரையான சீனாவின் தனிச்சிறப்பான வரலாற்று காலத்தைச் சேர்ந்த பொருட்களாகும். மூன்றாவது பகுதியில், பண்டைக்கால தட்டுமுட்டுச்சாமான்கள், பழைய நிழற்படங்கள் அடங்கிய சீனாவின் நாட்டுப்புற பண்பாட்டுக் கலைப்பொருட்கள், முக்கியமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பொருட்களை, பயணிகளுக்கு செவ்வனே எடுத்துக்காட்டும் பொருட்டு, சியான் சுவான் அருங்காட்சியகம் பல வழிமுறைகளைப் பயன்படுத்த முயல்கிறது. இப்பொழுது, ஒரு பழைய திரைப்படம், கார்ட்டூன், மின் விளையாட்டு முதலியவற்றின் மூலம், பயணிகள் இந்தப் பொருட்களின் வரலாற்றை அறிந்துகொள்ளலாம்.
ஒலி, ஒளி, மின்னணு முதலிய அறிவியல் தொழில் நுட்ப வழிமுறைகளைப் பயன்படுத்தவது மட்டுமல்ல, சியான் சுவான் அருங்காட்சியகங்களின் கட்டிடங்களும், வரலாற்றை நன்றாக எடுத்துக்காட்டலாம். இங்குள்ள கட்டிடங்கள் பெரும்பாலானவை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வடிவமைப்பாளர்களால் உணர்வுபூர்வமாக வடிவமைக்கப்பட்டவை. தனிச்சிறப்பியல்பு உடையவை. சீனாவின் வடிவமைப்பாளர் XING TONG HE, ஜப்பானிய புகழ்பெற்ற சிற்பி ARATA ISOZAKI, அமெரிக்க தேசிய கட்டிடக் கலைஞர் சங்கத்தின் தலைவராக பதவி ஏற்றுள்ள CHESTER A WIDOM ஆகியோர் இதில் இடம்பெறுகின்றனர்.

பொருட்களைப் பார்வையிட்ட பின், அருங்காட்சியகங்களைச் சேர்ந்த ஹோட்டலில் தங்கி ஓய்வு செய்யலாம். இதில், JIN GUI GONG GUAN என்னும் ஹோட்டல் குறிப்பிடத்தக்கது. இந்த ஹோட்டலின் புறத்தோற்றத்தைப் பார்த்தால், பழைய கட்டிட பாணியைக் காணலாம். ஆனால் அதன் உள்ளே, தலைசிறந்த அலங்கரிப்பை காண முடியும். நாட்டுப்புற சேகரிப்பு பொருட்கள், அலங்காரப் பொருட்களாக, இந்த ஹோட்டலின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அதன் மேலாளர் LUO YUAN HUI அம்மையார் எமது செய்தியாளரிடம் பேசுகையில், JIN GUI GONG GUAN என்னும் ஹோட்டலிலுள்ள சேகரிப்புப் பொருட்களின் எண்ணிக்கை, ஒரு சிறிய அருங்காட்சியகத்தில் இருப்பதை விட, குறைவு அல்ல. இதில், சுமார் 500 பழைய பிரச்சாரப் படங்களும், நாட்டுப்புறத்திலிருந்து வாங்கிய ஏளாரமான பழைய தட்டு முட்டச் சாமான்களும் வைக்கப்பட்டன என்றார் அவர். தற்போது, இதில், மொத்தம் 80 லட்சம் யுவானை, ஹோட்டல் முதலீடு செய்துள்ளது. எதிர்காலத்தில், ஹோட்டலின் அலங்காரப்பணிக்காக, நாட்டுப்புறச் சேகரிப்பைத் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்.

2007ம் ஆண்டில், சியான் சுவான் அருங்காட்சியகங்களில் மேலும் அதிகமான அரங்குகள் அடுத்தடுத்து பயணியருக்கு திறந்து வைக்கப்படும். புதிய கருப்பொருள் கொண்ட மன்றமும், கட்டியமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் வாழ்க்கை, பத்து ஆண்டுக்கால உணர்வு. இதுவே, சியான் சுவான் அருங்காட்சியகங்கள் பயணியருக்கு வழங்கும் வாக்குறுதியாகும். LUO YUAN HUI அம்மையார் கூறியதாவது:
எமது ஹோட்டலும், அருங்காட்சியகங்களும், சீனாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க காட்சித்தலங்கள் என்பதை, இங்கே வந்து பார்த்த பிறகு உணர்ந்து கொள்ளலாம். சீனாவை அறிந்துகொள்வதோடு, சீனப்பண்பாட்டையும் புரிந்துகொள்ளலாம் என்றார் அவர்.