கழிவு நீர் கையாள தொழிற்சாலை லாசாவில் நிறுவப்படும்
cri
இவ்வாண்டின் பிற்பாதியில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் லாசாவில், முதலாவது நவீனமயமாக்க கழிவு நீர் கையாள் தொழிற்சாலை நிறுவப்படும். லாசா நகராட்சியின் பொறுப்பாளர் ஒருவர் பேசுகையில், இத்தொழிற்சாலையை நிறுவுவதற்கென சுமார் 40 கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டது. துவக்கத்தில், நாள்தோறும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் டன் கழிவு நீர் கையாளப்பட முடியும். நாள்தோறும் 2 லட்சத்து 50 ஆயிரம் டன் கழிவு நீரை கையாள்வது, நீண்டகால குறிக்கோளாகும். நல்ல பயனை பெறும் பொருட்டு, உயிரின வேதியியல் வழிமுறை மூலம், கழிவு நீரில், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் பிரித்து நீக்கப்படும்.
|
|