• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-02 14:52:44    
குடும்பத்தினர் அடிக்கடி பயன்படும் மருந்து(பகுதி 1  )

cri

ஒவ்வொரு குடும்பத்தினரும் அடிக்கடி பயன்படும் மருந்துகளை வீட்டில் வைத்திருப்பது வழக்கம். தடுமன் போன்ற பொது நோய்களால் பீடிக்கப்படும் போது மருத்துவ மனைக்குச் செல்லாமல் மருந்து உட்கொண்டால் சரியாகிவிடும். ஆனால் சிலர் மருந்துகளை சரியாக பயன்படுத்தாத காரணத்தால் நோயைக் குணப்படுத்துவதற்கு பதிலாக மருந்துகளால் ஏற்படும் சில பாதகமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவார்கள். சில சமயம் அது உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தும். அப்படியிருக்க வீட்டில் எத்தகைய மருந்துகளை வைத்திருக்க வேண்டும்?இந்த மருந்துகளை எவ்வாறு வைத்திருப்பது?மருந்துகளின் பயன்பாடு பற்றிய அடிப்படை அறிவு என்ன?என்பன பற்றி இப்போது கூறுகிறோம். அறிவிப்பாளர்.

பொதுவாக கூறின், ஒவ்வொரு குடும்பமும் தமது வீட்டில் ஒரு சிறிய மருந்து பெட்டியை வைத்திருப்பது வழக்கம். அனைவரின் மருந்து பெட்டிகளில் என்ன என்ன மருந்துகளை வைத்திருப்பது என்பது பற்றி எமது செய்தியாளர் வீதியில் செல்லும் சிலரை பேட்டி கண்டார்.

என் வீட்டில் வலியையும் காய்ச்சலையும் நீக்கும் மருந்துகள் இருதய மற்றும் ரத்த நாள நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகள் ஒவ்வாமை என்னும் அலர்ஜி தடுப்பு மருந்துகள் போன்ற மருந்துகளை வைத்திருக்கிறேன் என்றார் ஒருவர். "என் வீட்டில் தடுமன் தடுப்பு மருந்துகள் உண்டு" என்றார் இன்னொருவர். உண்மையில் வீட்டில் எத்தகைய மருந்துகளை வைத்திருப்பது நல்லது என்பது பற்றி பெய்சிங் ராணுவ ஆணை வட்டாரத்தின் பொது மருத்துவ மனையின் மருத்துவர் லியூ துவான் சி கூறியதாவது.

"வீட்டில் சின்ன மருந்து பெட்டி பற்றி குறிப்பிடும் போது சில கோட்பாடுகளைப் பின்பற்றிச் செயல்பட வேண்டும் என்று நான் கருதுகின்றேன். முதலில் குறைவு அதே வேளையில் தலைசிறந்தது என்ற கோட்பாடு. ஏனெனில் சாதாரண நாட்களில் நாம் அதிகமான மருந்துகளைப் பயன்படுத்த தேவையில்லை. ஒவ்வொரு வகை மருந்திலும் 3-5 நாட்களுக்குத் தேவையான அளவு மருந்து இருந்தாலே போதும். காலம் இடம் தனித்தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப செயல்படுவது என்பது இரண்டாவது கோட்பாடாகும். எடுத்துக்காட்டாக கோடைகாலத்தில் கொசுக்கள் அதிகம். அப்போது கொசுக் கடிக்கு எதிரான மருந்துகளை வைத்திருக்க வேண்டும். குளிர்காலத்தில் இருமல் தடுப்பு மருந்துகளை வீட்டில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் வாழும் இடம் மாநகரமாக இருந்தால் பெரிய மருந்து பெட்டிகளை வைத்திருக்க தேவையில்லை. காரணம் மாநகரங்களில் மருந்து விற்கும் கடைகள் அதிகம்"என்றார். அப்படfயிருக்க மருந்துகளை வைத்திருக்கும் போது என்னென்ன முனெச்சரிக்கைகளைக் கவனிக்க வேண்டும்? முதலில் தமது வீட்டிலுள்ள சிறிய மருந்து பெட்டிகளை ஒழுங்குசெய்ய வேண்டும். பொதுவாக கூறின், 3-6 திங்களுக்கு ஒரு முறை சரிப்படுத்த வேண்டும். சில பயனற்ற மருந்துகளை வீசிவிட்டு சில மருந்துகளை மாற்ற வேண்டும்.