• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-02 09:25:09    
உலக நீச்சல் சாம்பியன்பட்ட போட்டி

cri

மார்ச் 26ம் நாள் பிற்பகல், 12வது மெல்போன் உலக நீச்சல் சாம்பியன்பட்ட போட்டியின் நீர் குதிப்பு ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. சீன நீர் குதிப்பு அணி, 10 தங்க பதக்கங்களிலான ஒன்பதை பெற்று, வரலாற்றில் மிக சிறந்த சாதனையைப் படைத்துள்ளது.

26ம் நாள் நடந்த 2 இறுதி ஆட்டங்களில் சீன வீராங்கனைகள் கோசிங்சிங் ஊமின்சியா சோடி மகளிருக்கான இரட்டையர் 3 மீட்டர் உயர பாய்ச்சல் பலகை நீர் குதிப்புப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றனர். லின்யோ, கோலியாங் ஆகியோர் ஆடவருக்கான இரட்டையர் மேடை நீர் குதிப்பு போட்டியில் சாம்பியன்பட்டம் வென்றனர். முன்னதாக, சீன அணி, ஆடவர் 1 மீட்டர் உயர பாய்ச்சல் பலகை, ஆடவர் 3 மீட்டர் உயர பாய்ச்சல் பலகை, ஆடவருக்கான இரட்டையர் 3 மீட்டர் உயர பாய்ச்சல் பலகை முதலிய 7 ஆட்டங்களிலும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

இதில் நட்சத்திர வீராங்கனை கோசிங்சிங், தொடர்ந்து 4வது முறையாக மகளிருக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் 3 மீட்டர் உயர பாய்ச்சல் பலகைப் போட்டிகளில் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். அவர் 2001, 2003, 2005ம் ஆண்டு உலக நீச்சல் சாம்பியன்பட்ட போட்டிகளிலும், 2004ம் ஆண்டு ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியிலும் சாம்பியன் பட்டம் தட்டிச்சென்றார்.

27ம் நாள் போட்டியில் 4 உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டன. ஆடவர் 200 மீட்டர் சுதந்திரப்பாணி நீச்சலில் அமெரிக்க வீரர் வில்புஸ் 1 நிமிடம் 43.86 வினாடியில் தங்கப் பதக்கத்தை வென்றார். அத்துடன் பிரபல ஆஸ்திரேலிய வீரர் சோப் உருவாக்கிய சாதனையையும் முறியடித்துள்ளார்.

மகளிர் 100 மீட்டர் முதுகுப்புறப்பாணி நீச்சலில் பிரபல அமெரிக்க வீராங்கனை கோவ்லின், உலக சாதனையை முறியடித்தார்.

ஆடவர் 100 மீட்டர் முதுகுப்புறப்பாணி நீச்சலில் அமெரிக்க வீரர் பேல்சோ உலக சாதனையை முறியடித்தார்.
மகளிர் 200 மீட்டர் சுதந்திரப்பாணி நீச்சலில் இதாலி வீராங்கனை பேலெகரினி ஜெர்மனி வீராங்கனை வான் ஆல்ம்சிக் முன்னர் நிகழ்த்திய உலக சாதனையை முறியடித்துள்ளார்.