• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-03 15:20:16    
வூ ஷு சாம்பியன் போட்டிகள்-இரண்டாம் பாகம்

cri

இனி போட்டிகள் நடைபெறும் திடல்களுக்குப் போகலாமா? ஜெங்ஷோ ஜிம்னாஸியத்திலும், ஜெங்ஷோ 47ஆம் எண் இடைநிலைப் பள்ளி ஜிம்னாளியத்திலும் போட்டிகள் நடைபெற்றன. ஜெங்ஷோ ஜிம்னாஸியத்தில் இரண்டு திடல்களிலும், 47வது எண் பள்ளியின் உள்ளரங்கில் 3 திடல்களிலும் நான்கு வகை வூ ஷு போட்டிகள் நடைபெற்றன. நாங்கள் சென்ற போது, பள்ளித் திடல்களில் ஒன்றில் தாய்ச்சி போட்டியும், இன்னொன்றில் கம்பு, ஈட்டி, சாட்டை முதலிய கருவிகளைப் பயன்படுத்தி வூ ஷு திறன் காட்டும் போட்டியும், மூன்றாவது திடலில் வெறும் உடல் அளசவுகளின் மூலம் வூ ஷு திறன் காட்டும் போட்டியும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சுற்றிலும் ரசிகர்களின் உற்சாக ஒலிகள். நடுவர்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து மதிப்பெண் கொடுத்து கொண்டிருந்தனர். மது குடிக்கும் பாவனையில் வூ ஷு சண்டை போடும் திறமையை ஒரு மியான்மர் சிறுவன் செய்து காட்டி, அனைவரையும் திகைக்க வைத்தான். உடம்பில் எலும்பே இல்லையோ என நினைக்கும் படி வளைத்தான். உள்ளரங்கப் பகுதிக்குப் போன போது, தங்கப் பதக்கத்தைத் தட்டிய பெருமிதத்துடன் ஒரு ஆஸ்திரேலிய விராங்கனை வந்தார்.

உக்ரைன் நாட்டுப் பயிற்சியாளர் எதிர்ப்பட்டார். எனக்கு ஏற்பட்ட ஒரு சந்தேகத்திற்கு அவரிடம் விளக்கம் கேட்டேன். பாரம்பரிய வூ ஷு, என்கிறார்களே! அப்படியானால் நவீன வூ ஷு இருக்கிறதா? இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
உள்ளரங்கை விட்டு வெளியே வந்த போது இலங்கை அணியின் 11 வயது சிறுவன் பிரவீண், இரண்டாவது பரிசு பெற்ற பெருமையோடு நின்று கொண்டிருந்தான்.
அருகில் இருந்த அவனுடைய தந்தையும், அணியின் பயிற்சியாளருமான சுனில் ஜெயதிஸ்ஸா, தாம் தமிழகத்திற்கு ஆண்டுதோறும் போய், இளைஞர்களுக்கு குங்பூஃ கற்பிப்பதாகக் கூறினார். இலங்கை கருப்பு டிராகன் வூ ஷு சங்கத்தின் சார்பில் வந்துள்ள அணியின் தலைவர் சுமித் கருண நாயகே இந்தப் போட்டிகள் பற்றிப் பேசினார்.


வெனிசுவேலா, ஜப்பான், அமெரிக்கா, கியூபா, துருக்கி, சவுதி அரேபியா என்று உலகின் பற்பல பகுதிகளில் இருந்து வந்த குங்பூஃ வீரர்களிடம் உரையாடிய போது, அனைவரும் ஒரே குரலில், சீனர் ஒருவர் தங்களுக்கு இந்தக் கலையைப் பயிற்றுவித்ததாகக் கூறினார்கள். மேலும் புரூஸ்பி, ஜேக்கி சான் படங்களின் மூலம் குங்பூஃ பற்றி அறிந்து ஆர்வத்தை வளர்த்துக் கொண்டதாகத் தெரிவித்தனர். தாமோ எனப்படும் தர்மபாலர் என்ற இந்தியத் துறவி அறிமுகப்படுத்திய ஒரு போர்க்கலையை சீனர்கள் உலகெங்கும் பரவுவதை அறிந்த போது எனக்குப் பெருமையாக இருந்தது.
இந்தப் போட்டிகளின் போது, கருத்தரங்கு ஒன்றும் நடத்தப்பட்டு கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. வூ ஷுவின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட்டது. அக்டோபர் 19 அன்று மாலையில் ஏர்பாட்டுக் கமிட்டியின் துணை இயக்குநர் Gong Li Qun தலைமையில் நிறைவு விழா நடைபெற்றது. ஜெங்ஷோ மாநகராட்சி மேயர் Zhao Jian Lai நிறைவுரை ஆற்றினார்.