• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Tuesday    Apr 8th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-03 15:29:03    
கல்வி துறையிலான முன்னேற்றம்

cri

தவிர, தொலை மேற்கில் அமைந்துள்ள கிராம பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர் பதவியை வழங்கி, பட்டம் பெற்ற பல்கலைக்கழக மாணவர்களை அங்கே சென்று கற்பிப்பதற்கும் அரசு ஊக்கம் அளிக்கிறது. பூர்வாங்க ரீதியற்ற புள்ளிவிபரங்களின் படி, தற்போது, சுமார் 20 ஆயிரம் பட்டதாரிகள் மேற்கு பகுதியில் அமைந்துள்ள 2800க்கும் அதிகமான இடைநிலை மற்றும் துவக்க நிலை பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர் பதவி ஏற்றனர். மேற்கு கிராமப்புறங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலைமையை இது பெரிதும் மேம்படுத்தியுள்ளது. கல்வி தரமும் உயர்ந்துள்ளது. அதேவேளை, சீனாவின் பல்வேறு இடங்களிலிருந்து சிறப்பு ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கிராமப்புற பள்ளிகளில் மாறி மாறி கற்பிக்கின்றனர்.


தற்போது, சீனாவில் சுமார் 800 கோடி யுவான் தொலைக்கற்றல் எனப்படும் இணையதள வகுப்பு கட்டுமானத்தில் செலுத்தப்பட்டது. சுமார் 80 விழுக்காட்டு கிராமப் பள்ளிகள் தொலைக்கற்றல் இணையதளத்தை உருவாக்கியுள்ளன. ச்சியாங் சி மாநிலத்தின் லே சி ஊரிலான Nao Qiao விருப்ப துவக்க பள்ளி இவற்றில் ஒன்றாகும். தொலைக்கற்றல் இணையம் மூலம், மாணவர்கள் பெய்ஜிங்கிலுள்ள சிறப்பு ஆசிரியர்களின் பாடத்தைக் கேட்கலாம் என்று ஆசிரியர் Huang Yanqun கூறினார். முன்பு, இங்குள்ள மாணவர்களைப் பொறுத்த வரை, இது ஒரு கனவாகும் என்றார் அவர்.
முன்பு, கிராமப் பள்ளியில் வசதி இல்லை. கல்வி பெற பல பெற்றோர்கள் தமது குழந்தைகளை நகரத்துக்கு அனுப்பினர். தற்போது, தொலைகற்றல் இணையதளம் திறக்கப்பட்டது. பல மாணவர்கள் திரும்பியுள்ளனர் என்றார் ஆசிரியர் ஹுவாங்.
திட்டத்தின் படி, இவ்வாண்டின் இறுதிக்குள், சீனாவில் ஒவ்வொரு கிராமப் புள்ளிகளிலும் செயற்கை கோள் தொலைக்காட்சி நிகழ்ச்சி பெறும் வசதி ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு இடைநிலை பள்ளிகளிலும் குறைந்தது ஒரு கணினி வகுப்பறை அமைக்கப்படும்.


கடந்த ஆண்டு முதல், சீனியர் இடை நிலை பள்ளி, தொழில் பள்ளி, பல்கலைகழகம் ஆகியவற்றில் கட்டாய கல்வி கட்டத்தில் இல்லாத வறிய மாணவர்களுக்கு கல்வி உதவி அமைப்புமுறையை அரசு மேம்படுத்தி வருகின்றது. வறிய மாணவர்களுக்கு புலமைப் பரிசு, கல்வி உதவி கடன், சிறப்பு இன்னலுக்கான உதவி ஆகியவற்றை அரசு வழங்கி,அவர்களின் கல்வி கட்டணத்தை குறைக்கின்றது. எடுத்துக்காட்டாக, தொடர்புடைய வாரியங்கள் 2000 கோடி யுவான் மதிப்புள்ள கல்வி உதவி தொகையை 24 இலட்சம் வறிய மாணவர்களுக்கு வழங்குகின்றது. சீன மக்கள் பல்கலைக்கழகத்தின் மாணவர் He Zanஎன்பவர் பயன் பெற்ற மாணவர்களில் ஒருவராவார். அவர் கூறியதாவது,
உரை 5 ஹுநான் மாநிலத்தின் ஒரு சிறிய மலை ஊரைச் சேர்ந்த எனது குடும்பத்துக்குத் திங்களுக்கு சில நூறு யுவான் வருமானம் மட்டும் கிடைக்கலாம். ஒரு பல்கலைக்கழக மாணவருக்கு ஆண்டுக்கு 4000,5000 யுவான் கல்வி கட்டணத்தை கொடுக்க முடியாது. ஆனால், அரசின் உதவி கடன் பெற்ற பின், கட்டணம் பற்றி கவலைப்பட வேண்டாம். முழு மூச்சுடன் கற்க மடியும் என்றார் அவர்.


ஆனால், இப்போது, கல்வி துறையில் நியாய கல்வியை முன்னேற்றும் பணி இன்னும் கடினமானது. இருப்பினும், கல்வியின் பொது நலன் தன்மையில் அரசு தொடர்ந்து ஊன்றி நின்றுள்ளது. நியாயமான கல்வையும், அதன் தொடரவல்ல வளர்ச்சியும் சீனக் கல்வி கொள்கையின் முக்கிய பகுதியாக அமைக்கும் என்று சீன கல்வி துறை அமைச்சர் சோ ச்சி தெரிவித்துள்ளார்.
நேயர்கள் இதுவரை சீனாவில் கல்வி துறையின் வளர்ச்சி பற்றி கேட்டீர்கள். இத்துடன் இன்றைய அறிவியல், கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நிறைவடைகின்றது.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040