எஸ் கே பாப்பம் பாளையம் பி டி சுரேஷ்குமார் படைத்த கவிதை வாசிக்கப்படுகின்றது. நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என வாதிக்கும் நக்கீரன் நமது சொந்தக் காரன் வாரி வழங்கும் பாரி வள்ளலும் வீரத்தின் விளை நிலம் வீரபாண்டிய கட்ட பொம்மனும் நமது சொந்தக் காரர்களே ஆனாலும் பழம் பெருமை பந்திக்கு உதவாது புதுச் சிந்தனையில் புத்துலகம் படைக்க தைத்திருநாளில் சபதம் ஏற்போம். மீண்டும் எங்கள் இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என்று பி.தி.சுரேஷ்குமார் தெரிவிக்கிறார்.
சீன வசந்த விழாவுக்கான ஈரோடு-9 சு வேணுகோபால் தெரிவித்த கருத்து. சீன வானொலி நிலையத்தின் வாயிலாக உலகின் மாபெரும் இரண்டு நாடுகளின் மக்களின் ஒற்றுமைக்கு வித்திட்டு மனித நேய வல்லரசாக வந்த பெப்ரவரி 18ம் நாளன்று பிறக்கும் வசந்த விழா ஆண்டு சுடர்விட்டு பிரகாசிக்க வாழ்த்துக்கள். பன்றிகளின் ஆண்டை ஆர்வமுடன் வரவேற்க 4 ஆயிரம் சிறு விளக்குகள் கொண்ட உருண்டைத் தூணில் எனது உள்ளத்திலுள்ள நட்புறவு அன்புச் சுடரும் ஒளி வீசட்டும். அன்புக்கு மொழி, இனம், நாடு, நிறம் என்ற பாகுபாடு இல்லை. உலக நாடுகளின் மக்கள் தொகையில் 620 கோடியில் 230 கோடி மக்கள் தொகை கொண்ட சீன இந்திய நட்புணர்வு அனைத்திந்திய சீன வானொலி மூலம் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. நாமகிரிப்பேட்டை ஜெ ரமேஷ் குமார் தெரிவித்த கருத்து. சீனாவின் இணைய தளமாகிய chinabroadcast.cn. இணையதளத்திற்குச் சென்று பார்த்தோம். அதிலும் பல்வேறு செய்திகள் பல்வேறு நிகழ்ச்சிகள் படங்கள் இடம் பெறுகின்றன என்பதையும் அறிந்தோம். மற்றும் ஞாயிறு அன்று ஒலிபரப்பாகும் விளையாட்டுச் செய்திகள் நேயர் கடிதம் நேயர் விருப்பம் போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் கவனிக்க தக்க நிகழ்ச்சிகளாகும். சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சியை கேட்ட பின் காத்தாங்குடி 5 மு.மு.ஜுமைஹா தெரிவித்த கருத்து. இன்பப் பயணம் நிகழ்ச்சியில் மீனவர்களின் வாழ்க்கையை உணரும் சுற்றுலா பற்றிய தகவலை கேட்டேன். மீனவர்களின் வாழ்க்கையை சுற்றுலா மூலம் உணருகின்ற விதத்தை மிகவும் விளக்கமாக தெரிந்து கொண்டேன். சுற்றுலா செல்ல வேண்டிய சில இடங்கள் குறிப்பாக சிங்காங் மலை, லூசான் மலை ஆகியவற்றில் சுற்றுலா சென்றால் எவ்வாறு சுற்றுலா கழிக்க வேண்டும் என்ற தகவலையும் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி. மு.மு.ஜுமைஹா சுற்றுலா தகவல் கேட்ட பின் தெரிவித்த கருத்துக்கு பாராட்டுக்கள். அடுத்து திருச்சி-2 எம்.பிரவின்குமார் சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி பற்றிய கருத்து. சைவ உணவுகள் பற்றியும் சில உணவு குறிப்புகள் பற்றியும் நிகழ்ச்சி மூலம் கூறுங்கள். ஏனெனில் சைவ உணவுகள் தான் அதிகமாக உண்ணப்படுகின்றன. ஆகவே எங்கள் விருப்பம் நிறைவேற்றலாமா என்றார் எம். பிரவின் குமார்.
எம். பிரவின் குமாரின் விருப்பத்தை நிறைவேற்றுவது கடினமான விடயம் இல்லை. தொடர்புடைய பொறுப்பாளரிடம் இந்த கருத்து ஒப்படைக்கப்படும். அடுத்து நமது புதிய நேயரான காத்தான்குடி-3 a.w.m அனஸ் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி. உங்கள் வானொலி மூலம் உலகில் நிகழ்ந்த பல விடயங்களை அறிந்து கொண்டேன். அவற்றுடன் இணைந்து கொண்ட செய்தித் தொகுப்பும் எனக்கு மிகவும் பயன் அளித்துவருகின்றது. குறிப்பாக நிகழ்ச்சிகளை கேட்ட பின் சீன மக்களுடைய சமூக வாழ்வு மகளிர் குழந்தைகள் சீன உணவு வகைகள் போன்றவை பற்றி வேறுப்பட்ட அளவில் அறிந்து கொண்டுள்ளேன். கடையாலுருட்டி எம் பிச்சைமணி சீனக் கதை கேட்ட பின் கதை பற்றி விளக்கிய தகவலை கேளுங்கள். தன்னைத் தானே நம்பாத ஒருவர் காலணி வாங்கச் சென்று விட்டு தனது கால் பாதம் வரைந்த படத்தை எடுக்க மீண்டும் வீடு சென்று திரும்புவதற்குள் காலணிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன என்று சொல்லியதை கேட்ட போது சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவிட்டது அருமையான கதை சொல்லி தருவதற்கு மிக்க நன்றி. சீனக் கதை நிகழ்ச்சி பற்றி இன்னொரு நேயர் தெரிவித்த கருத்தை கேளுங்கள். காங்கேயம் பி நந்தக் குமார் கடிதம் மூலம் எழுதுகின்றார். வாத்து சேவல் கதையையும் விட்டில் பூச்சி கதையையும் எங்கள் வீட்டில் சிறுவர்கள் அனைவரும் விரும்பி கேட்டு ரசித்தனர். கதை முடிந்ததும் அந்த கதைகள் உணர்த்திய அற்புதமான கருத்தை சிறுவர்கள் கூற கேட்ட எனக்கு வியப்பாய் இருந்தது. சீனக் கதைகள் மூலம் சிறுவர்கள் மனதில் இடம் பிடித்த சீன வானொலிக்கும் பசுமரத்தாணி போல் நேயர்கள் மனதில் பதியும் படி கூறுவதற்காக ராஜாராம் அவர்களுக்கு நன்றி என்று பி நந்தக் குமார் தெரிவித்தார். இலங்கை மாணவன் எழுதிய கடிதம். தமிழ் பிரிவின் பணியாளர்களே எனது வகுப்பில் அனேகமான மாணவிகள் சீன வானொலி நேயர்களாக உள்ளார்கள். என்னிடம் அவர்கள் கடிதங்களை காட்டும் போது எனக்கு பொறாமையாக உள்ளது. நானும் உங்கள் வானொலி நேயரக விரும்புகின்றேன். பதில் கடிதம் எதிர்பார்க்கின்றேன் என்று காத்தாங்குடி-04 H.M.F.நுஹா கடிதத்தில் எழுதிகின்றார். காத்தாங்குடி-6 எம். ஆர் எம் ரிப்க்கி இப்படியே கருத்து தெரிவித்தார்.
உத்திரக்குடி சு கலைவாணன் ராதிகா தெரிவித்த கருத்து ஜனவரி 18ம் நாளன்று ஒலிபரப்பாகிய நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் கால்சியம் மாத்திரை உட்கொள்வது பற்றி கருத்துக்களை எடுத்து கூறுகையில் அனுபவம் கொண்ட மருத்துவர் கூறியது போல் உணரப்படுகின்றது. கிராமத்தில் வாழக் கூடிய படிப்பறிவு இல்லாத, மாத்திரைகளை எப்படி உட்கொள்வது என்று தெரியாமல் இருந்த மக்களுக்கு இந்த நிகழ்ச்சி ஓர் விழிப் புணர்வு பிரச்சாரம் . இந்த நிகழ்ச்சி இரவு கேட்டு விட்டு மறுநாள் எங்கள் கிராமத்தில் உள்ள தாமரை தேன் மலர் அறிஞர் அண்ணா ஆகிய பெயர்களிலான மகளிர் சுய உதவி குழுக்களை அமர வைத்து கேட்கச் செய்தோம். இந்த நிகழ்ச்சி எங்களுக்கு உதவியாக அமைந்தது. மிக்க நன்றி. இராசிபுரம் கே,குணசேகரன் சீனாவின் சிறுப்பான்மைத் தேசிய இன மக்களின் குழந்தை கல்வி பற்றி தெரிவித்த கருத்து. சீனத் தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சி மூலம் தாதார் இனத்தின் கல்வி குறித்து அறிந்தோம். தாதார் இனக் கல்வி குடும்பக் கல்வியில் அதிக ஆர்வம் கொண்ட கல்வியாகும். 6 வயது குழந்தைகள் முதல் 72 வயதான பெரியவர்கள் வரை கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்படுகின்றது. தாதார் இன பண்பாட்டை சீனாவின் மற்ற இனங்கள் கற்று வருகின்றன. சீன அரசும் இதில் அதிக அக்கறை காட்டி வருகின்றது. சிறுபான்மை தேசிய இனத்தின் மொழி வெளிக்கொணரப்படுவதில் அரசு கவனம் செலுத்துவது மிகவும் பாராட்டத்தக்கது.
|