• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-05 09:21:19    
ரஷியாவில் ஆடவர் விழா

cri

ரஷிய நாட்டில், பிப்ரவரி திங்கள் 23ஆம் நாள், ஆடவர் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. முன்பு, தாய்நாட்டின் பாதுகாவலர் தினம் என்று அழைக்கப்பட்ட இந்நாள், ரஷிய ராணுவத்தினருக்குரிய நாளாகவே இருந்து வந்தது.காலம் செல்லச் செல்ல, இது அனைத்து ரஷிய ஆண்களின் நாளாக மாறியுள்ளது. 2000ஆம் ஆண்டு முதல், ரஷியா முழுவதிலும் இந்நாள் சட்டப்படியான விடுமுறை நாளாகக் கொண்டாடப்பட்டுள்ளது. இந்நாளை முன்னிட்டு, பெண்மணிகள், தத்தம் கணவர், தந்தையார் மற்றும் சகோதரர்களின் சார்பில் வானொலியின் "நேயர் விருப்பம்" நிகழ்ச்சி மூலம் பாடல்களைத் தேர்ந்தெடுத்து வாழ்த்து தெரிவிப்பர். பேரங்காடிகளில் மின்சார சவரக் கருவி, உயர்தர கழுத்துக்கச்சு, தோல் பை போன்றவை, நல்ல விற்பனையாகும் வணிகப் பொருட்களாக மாறி விடும்.

 

நீண்டகால கடன் பெற்ற 102 வயது கிழவர் பிரிட்டனின் வங்கி ஒன்று, அண்மையில் 102 வயது கிழவருக்கு 25 ஆண்டுக்கால அடைமானக் கடனை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. சுசெக்ஸ் என்ற இடத்தைச் சேர்ந்த இந்தக் கிழவர், வீட்டு மற்றும் நிலச் சொத்து வணிகர் ஆவார். அடைமானக் கடன் உடன்படிக்கையின் படி, அவருக்கு 4 லட்சம் அமெரிக்க டாலரைக் கடனீட்டுத் தொகையாக வழங்க அவ்வங்கி இசைந்துள்ளது. எதிர்வரும் 25 ஆண்டுகளில், இக்கிழவர் திங்கள்தோறும் 1916 அமெரிக்க டாலரை வங்கிக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும். அதாவது, தமக்கு 127 வயதாகும் போது தான், அவர் இந்தக் கடனீட்டுத் தொகையைத் தீர்க்க முடியும்.

மெக்சிகோவில் ஆயுதத்துக்குக் கணினித் திட்டம் மெசிக்கோ நாட்டின் தலைநகரான மெக்சிகோவில் நகரவாசிகள் சிலர் அண்மையில் காவற்துறையினரிடம் 21 ஆயுதங்களை ஒப்படைத்து, கணினி, உணவுப்பொருள், பணத்தொகை ஆகியவற்றைப் பெற்றுள்ளனர். கடந்த சில நாட்களாக, மெக்சிகோ நகரின் பொது பாதுகாப்பு வாரியம், வன்முறை நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையில், தங்கள் வீட்டில் ஒளித்து வைத்துள்ளை ஆயுதங்களைக் கொண்டு, கணினி, உணவுப்பொருள் போன்ற பயன்பாட்டுப் பொருட்களைப் பரிமாறிக்கொள்ளுமாறு நகர மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த மார்ச் 27ஆம் நாளன்று, குடும்பத் தலைவிகள் 5 பேர், குழந்தை குட்டிகளுடன் காவல் நிலையத்துக்குச் சென்று தத்தம் வீட்டிலுள்ள ஆயுதங்களை ஒப்படைத்தனர். குஸ்மான் என்ற வணிகர், 3 கை துப்பாக்கிகளையும் 270 ரவைகளையும் கொண்டு,632 அமெரிக்க டாலர் தொகையுடன் 3 பெட்டி உணவுப் பொருட்கள் மற்றும் கணினி ஒன்றையும் பரிமாறிக்கொண்டார். ஆயுதத்துக்குக் கணினித் திட்டம் இதுவே.