காட்டு விலங்கு ஆரய்ச்சி நிலையம்
cri
சீன அறிவியல் கழகத்தின் விலங்கு ஆய்வகமும் க்க்சிலி என்ற தேசிய இயற்கை பாதுகாப்பு மண்டல நிர்வாக ஆணையகமும், அண்மையில் பெய்சிங்கில் உடன்படிக்கை ஒன்றில் கையொப்பமிட்டுள்ளன. திட்டத்தின்படி இவ்வாண்டில் சின் காய்-திபெத் பீடபூமியில் கடல் மட்டத்திலிருந்து 4600 மீட்டார் உயரத்தில் விலங்கு ஆரய்ச்சி நிலையம் ஒன்று நிறுவப்படும்.
இந்த ஆரய்ச்சி நிலையத்தின் நிலப்பரப்பு 1000சதுரமீட்டராகும். ஆரய்ச்சி, பாதுகாப்பு, அறிவியல் பரவல் ஆகியவற்றைக் கொள்ளும் பீடபூமி காட்டு விலங்கு ஆரய்ச்சி தளமாக, இந்நிலையம் மாறும் என்று க்க்சிலி என்ற தேசிய இயற்கை பாதுகாப்பு மண்டலத்தின் நிர்வாக ஆணையகத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறினார்.
|
|