• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-05 19:06:53    
சுவாங் சிங் நகரிலுள்ள செங்குத்தான பாறை நகரம்

cri

மலை நகர் என்ற தனிச்சிறப்பியல்புடன் கூடிய தென்மேற்கு சீனாவிலுள்ள சுவாங் சிங் நகரம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை ஈர்த்து வருகிறது. யாங்சி ஆறும் ஜியாலீங் ஆறும், நகரத்துக்கு ஊடாகச் சென்று, சுவாங் சிங் நகரத்தை நான்கு கரைகளாக பிரித்துள்ளன. கடந்த காலத்தில், ஆற்றின் கரையில் எங்கும், மரக் கம்பங்களை ஆதராரமாகக் கொண்ட, மர வீடுகள் கட்டியமைக்கப்பட்டன. இவற்றைத் தொங்கு வீடுகள் என்று, உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். இதில், ஹோங் யா தூங்கிலுள்ள தொங்கு வீடு தொகுதி, சுவாங் சிங்கின் கப்பல் தங்கு துறைப் பண்பாட்டின் புதைபடிவம் என்று கூறலாம். தாம் முதல் முறை ஹோங் யா தூங் நாட்டுப்புற பழக்க வழக்க மண்டலத்திற்கு வந்து பார்த்த உணர்வு பற்றி, குவாங் துங் மாநிலத்தின் பயணி LIU DAN அம்மையார், எமது செய்தியாளரிடம் கூறியதாவது:

 
ஹோங் யா தூங், மலையில் கட்டியமைக்கப்பட்டது. அதன் ஒட்டுமொத்த கட்டடப் பாணி, அமைதியானது. பண்டைக்கால கட்டிடங்களும், நவீன நகர நடையுடை பாவனையுடன் கூடிய நகரத்துடன் இணைந்துள்ளன என்றார் அவர்.


ஹோங் யா தூங் தொங்கு வீடு தொகுதி, யாங்சி ஆறு மற்றும் ஜியா லீங் ஆறு சங்கமிக்கும் கரையிலுள்ள உயரமான செங்குத்தான பாறையில் அமைந்துள்ளது. இக்கட்டிடத் தொகுதியின் மொத்த நீளம், சுமார் 600 மீட்டராகும். மலைச் சாரலுக்கு ஏற்றபடி, 11 அடுக்கு மாடி தொங்கு வீடுகள், மேல் இருந்து கீழ் வரை, 75 மீட்டர் உயரவித்தியாசத்தில் கட்டிடத் தொகுதியாக உருவாகியுள்ளன. உள்ளூர் மக்கள், அரை வானில் இரு பண்டைக்கால வீதிகளைக் கட்டியுள்ளனர். தற்போது, உலகளவிலான நகர கட்டிடத் தொகுதிகளில், ஹோங் யா தூங், மிகப் பெரிய பரப்பளவும், மிக அதிகமான உயர வித்தியாசமும் உடைய கட்டிடத்தொகுதியாகும். வண்ணம் மிக்க இந்தக் கட்டிடங்கள், வானில் தொங்கும் மாளிகையைப் போல் காட்சியளிக்கின்றன. சுவாங் சிங் நகரவாசி திரு LIU XIAN கூறியதாவது:

 
இக்கட்டிடத்தொகுதி, சுவாங் சிங்கின் வரலாற்றையும் பண்பாட்டையும் பிரதிபலித்துள்ளன. பயணிகள் ஹோங் யா தூங் நாட்டுப்புற பழக்க வழக்க மண்டலத்துக்கு வரும் போது, சுவாங் சிங் மாநகரின் வரலாற்றையும், நவீனத் தோற்றத்தையும் உணர்ந்து கொள்ளலாம் என்றார் அவர்.


தற்போது, பயணிகள், கப்பல் மூலம், ஹோங் யா தூங்கிற்கு வசதியாக செல்லலாம். முதல் மாடியிலுள்ள சுற்றுலா மண்டபத்தில், மின் தூக்கி மூலம், இம்மண்டலத்தின் உச்சி மாடிக்கு நேரடியாக போகலாம்.