மேற்கு சீனாவின் பெரும் வளர்ச்சி, "குறைந்த பதில் விலையிலான அதிகரிப்பை நாட வேண்டும்" என்று சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த கமிட்டியின் தலைவர் Ma Kai இன்று வலியுறுத்தினார். சீனாவின் மேற்கு நகரான Xi Anனில் நடைபெற்ற, மேற்கு பகுதியின் பெரும் வளர்ச்சி பற்றிய பணி தொடர்பான கூட்டம் ஒன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வளர்ச்சியானது, மேற்கு பகுதியின் பெரும் வளர்ச்சியில் முதல் பணியாகும். இருப்பினும், அங்கு ஏராளமான மூலவளம் இருப்பதால், இம்மூலவளம் கட்டுப்பாடின்றி பயன்படுத்தப்படலாம் என கருதிவிடக்கூடாது என்றார், அவர். மேற்கு பகுதி, இயற்கை சூழலின் கட்டுமானத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் பயன்தரும் முறையில் வலுப்படுத்தி, தொடரவல்ல வளர்ச்சி ஆற்றலை உயர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
|