கிழக்காசிய மண்டல நிதி ஒத்துழைப்பு
cri
பொருளாதார உலகமயமாக்கத்தினால் ஏற்படும் அறை கூவலைச் சமாளிக்கும் பொருட்டு, கிழக்காசிய மண்டல நிதி ஒத்துழைப்பை சீனா ஆக்கப்பூர்வமாக தூண்டும் என்று சீனத் துணை நிதி அமைச்சர் Li Yong கூறியுள்ளார். இன்று ஷாங்காய் மாநகரில் நடைபெற்ற "கிழக்காசிய நாணய ஒத்துழைப்பு" பற்றிய கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். கிழக்காசிய மண்டல நிதி ஒத்துழைப்பில் சீனா ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து, இதை முன்னேற்றுவிக்கின்றது. இம்மண்டலத்தின் இதர உறுப்பு நாடுகளுடன் கூட்டாக பாடுபட்டு, பல்வகை முன்மொழிவுகள் யதார்த்த முன்னேற்றமடைவதை சீனா தூண்டுகின்றது என்று அவர் தெரிவித்தார். இவ்வட்டாரத்தில் பொறுப்பான வளரும் நாடான சீனா, நிதி துறையில் இம்மண்டலத்தின் நாடுகளின் திறனையும், அனுபவப் பரிமாற்றத்தையும் வலுப்படுத்துவதில், பயிற்சி வகுப்புகளையும், கருத்தரங்குகளையும் நடத்தியுள்ளது என்று அவர் கூறினார்.
|
|