சீனாவின் அன்னிய வர்த்தகம்
cri
இவ்வாண்டின் முதலாவது காலாண்டில், சீனாவுக்கும், அதன் முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளுக்கும் இடையே இரு தரப்பு வர்த்தகம் பன்முகங்களிலும் விரைவாகவும் அதிகரித்தது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் ஆகியவை தொடர்ந்து சீனாவின் முதல் மூன்று பெரிய வர்த்தகக் கூட்டாளிகளாக திகழ்கின்றன. சீனச் சுங்கத்துறையின் தலைமை அலுவலகம் இன்று வெளியிட்ட புதிய புள்ளி விபரம் இதை காட்டுகின்றது. புள்ளி விபரங்களின் படி, இவ்வாண்டின் முதல் 3 திங்களில், ஐரோப்பிய ஒன்றியம், சீனாவின் முதலாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாகும். மொத்த இரு தரப்பு வர்த்தகத் தொகை, 7530 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. அமெரிக்கா, சீனாவின் இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாகும். மொத்த இரு தரப்பு வர்த்தகத் தொகை, 6670 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. ஜப்பான், சீனாவின் மூன்றாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாகும்.
|
|