• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-10 11:30:06    
வாழைப்பழம் இடம்பெறும் இனிப்பான வறுவல்

 


cri

வாழைப்பழம் இடம்பெறும் இனிப்பான வறுவல்

வாணி--- வணக்கம் நேயர்களே. சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். இன்று நானும் க்ளீட்டஸும் உங்களுக்கு ஒரு வகை இனிப்பான வறுவலை அறிமுகப்படுத்துகின்றோம்.

க்ளீட்டஸ் --- வணக்கம் நேயர்களே. வாணி, இன்று எந்த வறுவல் பற்றி கூறுவோம்?

வாணி--- வாழைப்பழம் இடம்பெறும் இனிப்பான வறுவல் பற்றி எடுத்துக்கூறுவேன். இந்த வறுவலுக்குத் தேவைப்படும் பொருட்கள் எளிதானவை. ஆனால், செய்முறை கொஞ்சம் கடினம்.

க்ளீட்டஸ் –-- நான் நினைக்கின்றேன். கடந்த நிகழ்சசியின் முடிவில் இதற்கு தேவையானவற்றைத் தெரிவித்தீர்கள்.

வாணி --- ஆமாம், இப்போது நான் மீண்டும் தெரிவிக்கின்றேன்.

வாழைப் பழம் 300 கிராம்
சர்க்கரை 100 கிராம்
மாவு 50 கிராம்
முட்டை 2
நல்லெண்ணெய் 3 கிராம்

வாணி --- முதலில், வாழைப்பழத்தை 2 சென்டி மீட்டர் அளவிலான துண்டுகளாக நறுக்கவும். முட்டைகளை ஸ்டார்ச்சுடன் நன்றாக கலக்கவும். பின்னர், இவற்றை வாழைப்பழத் துண்டுகளுடன் கலக்க வேண்டும்.
வாணலியை அடுப்பின் மீது வைத்து, இதில் எண்ணெய் ஊற்றவும். 15 வினாடிகளுக்குப் பிறகு, மாவுயுடன் நன்றாக கலந்த வாழைப்பழத் துண்டுகளை இதில் ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு, நன்றாக வறுக்க வேண்டும்.

க்ளீட்டஸ் --- அப்படியா. தனித்தனியாக வறுக்க வேண்டுமா?

வாணி --- ஆமாம். இப்படி செய்தால், வறுக்கப்பட்ட வாழைப்பழத் துண்டுகளின் நிறம் ஒரே மாதிரியாக இருக்கும். தட்டில் கொஞ்சம் நல்லெண்ணெயை ஊற்றி வைக்கவும். வாணலியை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். 30 கிராம் குடிநீரையும், 100 கிராம் சர்க்கரையையும் வாணலியில் வைத்து, மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். இப்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அடுப்பிலுள்ள சர்க்கரை நீர் சூடாகி, கொதிநிலையில் குமிழ்கள் தோன்றும். இந்த குமில்கள் மென்மேலும் சிறியதாகி, சர்க்கரை நீர் மஞ்சள் நிறமாகிவிடும். உடனடியாக, வாழைப்பழத் துண்டுகளை வாணலியில் போட வேண்டும் இவற்றை நன்றாக கலந்து பிறகு, தட்டில் வைக்கலாம்.

க்ளீட்டஸ் --- மேலும், சாப்பிடும் போது, அருகில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது நல்லது. அடுப்பிலிருந்து வாழைத் துண்டுகளை எடுத்து தண்ணீரில் வைத்த பிறகு, சாப்பிடலாம். வெளியே சர்க்கரை சேர்ந்த வாழைத் துண்டு மிகவும் சுவையாக இருக்கின்றது.

வாணி ---ஆமாம். சர்க்கரை நீரை கூடுதலாக கொதிக்கவிடக் கூடாது. அதிகம் கொதித்துவிட்டால் கசப்பான சுவை தான் மிஞ்சம். மேலும், வாழைப்பழத் துண்டை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, உள்ளே இனிப்பான பீன்ஸ் பயறுகளை போடலாம். இனிப்பான உணவை விரும்பிய நேயர்கள் வீட்டில் இதனைத் தயாரித்து ருசிக்கலாமே.
அடுத்த முறை சீன ஹோ கோ என்னும் உணவை தயாரிப்பது பற்றி கூறுவோம். நீங்கள் கோழி இறைச்சி 500 கிராம், காளாண் 150 கிராம், வெங்காயம் 150 கிராம் முதலியவற்றை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ளலாம்.

க்ளீட்டஸ் --- நிகழ்ச்சியின் முடிவில், அன்பான நேயர்களுக்கு வணக்கம் கூறி விடைபெறுவோர், வாணி, க்ளீட்டஸ்

வாணி ---வணக்கம். நேயர்களே.