சீனாவின் விமானப்பயணச் சேவைத் தொழில்
cri
சீனா சொந்தமாக ஆராய்ந்து தயாரித்த புதிய போர் விமானமான J-10 ரக விமானம் அண்மையில் மக்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதனை ஆராயும் போக்கையும் தொழில் நுட்பத்தையும் சீன விமானப்பயண சேவை தொழிலின் தொடர்புடைய வாரியம் வெளிப்படுத்தியுள்ளது. சீன மற்றும் வெளிநாட்டு கவனத்தை இது ஈர்த்துள்ளது.
 அண்மையில், ஒரு விமான நிலையத்தின் மேல் வான்பரப்பில்சீனாவால் சொந்தமாக ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட 2 விமானங்களுக்கும் 4 எதிரி விமானங்களுக்கும் இடையில் தீவிர போர் பயிற்சி நிகழ்ந்து. இறுதியில், சீனாவின் புதிய போர் விமானமான J-10 கர விமானம், இந்தப் பயிற்சியில் வெற்றி பெற்றது. திரு Song wen cong, இந்த J-10 விமானத்தின் பொது வடிவமைப்பாளராவார். கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகள் முதல் சீனா இந்த விமானத்தை தயாரிப்பதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டது. இதன் தயாரிப்பு, சீன விமானப்பயண சேவைத் தொழில் தற்சாப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டதிலான முக்கிய சாதனையாகும். சீன விமானப் படையின் விமான எதிர்ப்பு ஆற்றலை இது பெரிதும் உயர்த்தியுள்ளது.
 இந்த விமானத்தின் தயாரிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தகைய முன்னேறிய போர் விமானத்தை சீனா தயாரிக்கலாம். ஆராய்ச்சியின் முதல் கட்டத்தில் சர்வதேச முன்னணி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றோம் என்றார் அவர். புதிய தலைமுறை பன்நோக்கு போர் விமானம் இதுவாகும். தனி இருக்கை, இரட்டை இருக்கை ஆகிய 2 வகைகள் இருக்கின்றன. வடிவமைத்த போது, இறக்குகளையும் உடலையும் இணைக்கும் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கண்களுக்குத் தெரியாமல் பறப்பதற்கும், எரிபொருள் கலனின் அளவை உயர்த்துவதற்கும் இது துணை புரிந்ததுடன், விமானத்தின் பறத்தல் தன்மையையும் பெரிதும் மேம்படுத்தியுள்ளது. தவிர, சர்வதேச முன்னேறிய தரமுடைய பறத்தல் கட்டுப்பாட்டுத் தொகுதியையும் J-10 ரக விமானம் கொண்டுள்ளது. கைப்பிடிமான விசை, பாத இருக்கை விசை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம், விமான ஓட்டுநர் விமானத்தின் பறத்தல் நிலைமையைக் கணிணிக்கு அனுப்பலாம். கணிணி இந்தத் தகவல்களைக் கையாண்டு விமானத்தின் கட்டுப்பாட்டு வசதிகளுக்குக் கட்டளை பிறப்பிக்கின்றது. இடையூறுகள் சுயமாக கண்டறிந்துஒதுக்கி வைக்கப்படும். தற்போது, சீன விமானப் படை J-10 ரக விமானங்களைப் பெற்றுக்கொண்டு பயன்படுத்தத் துவங்கியது. சீன சென்து விமானத் தொழில் குழுமம் இந்தப் புதிய ரக விமானங்களைத் தயாரிக்கின்றது. இதன் இயக்குநர் ரோ ருன் குவாய் கூறியதாவது,

J-10 ரக விமானத்தின் வெற்றி, சீன விமானப்பயண சேவை தொழில் சொந்த ஆராய்ச்சி அமைப்புமுறை உருவாக்கியுள்ளதை உணர்த்துகின்றது. சீன விமானப்பயண சேவை தயாரிப்பு தொழிலுக்கும் ஆய்வு மற்றும் தொழில் நுட்ப சோதனைக்கும் இது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். இது மட்டுமல்ல, கடந்த ஓராண்டில், சீனாவின் விமானப்பயண சேவைத் தொழில் துறையில் J-10 ரக விமானம் உள்ளிட்ட அதிக முன்னேற்றங்கள் காணப்படுகின்றன.
|
|