• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-10 18:30:43    
மஞ்சள் நதியை நோக்கி

cri

ல.......ஙங்கும் நுரையுமாய் பொங்கிப்பாய்ந்து திரும்பாப் பயணமாய் கடலை நோக்கி கரைபுரண்டோடுகின்றது மஞ்சள் நதி.
ரா......இது தாங் வமிச மகாகவிஞன் லீ பைய் வரலாற்றுப் புகழ் பெற்ற மஞ்சள் நதியைப் பற்றி எழுதிய மகத்தான கவிதை வரிகள்.


சிங்காய்-திபெத் பீடபூமியில் உள்ள BAYANDKELA மலையடிவாரத்தில் தோன்றி ஒன்பது மாநிலங்கள் வழியாக 5000 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவைக் கடந்து பொஹாய் கடலில் கலக்கும் சீனாவின் இரண்டாவது மிகப் பெரிய நதிதான் மஞ்சள் நதி. வடமேற்குச் சீனாவின் மேட்டுப்பகுதியில் இருந்து பெருமளவு மணலையும் களிமண்ணையும் அடித்து வருவதால் பழுப்பு மஞ்சளாக இதன் நீர் காணப்படுகின்றது. எனவே மஞ்சள் நதி என்ற பெயர் பெற்றது.


கோடிக்கணக்கான சீன மக்களுக்கு உணவூட்டி உயிரூட்டுவதால் பண்டைய வரலாற்றில் தாய் நதி என்றும் மஞ்சள் நதி அழைக்கப்பட்டது. சீன நாகரிகத்தின் தொட்டில் என்றும் இது போற்றப்படுகின்றது. மஞ்சள் நதி பாயும் கரையோரங்களில் எண்ணற்ற வரலாற்றுத் தலங்களும் பண்பாட்டுச் சின்னங்களும் காணப்படுகின்றன. ஜெங்சோ நகரில் இருந்து புறப்பட்டு வடக்கே 25 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து மஞ்சள் நதியை நெருங்கும் போது ஹுயான்கோ என்ற கிராமம் வருகின்றது. அதை ஒட்டி உயரமான மஞ்சள் ஆற்றின் கரை. வெள்ளம் ஊருக்குள் புகுந்து விடாமல் தடுப்பதற்காக மக்கள் அடிக்கடி மண் அள்ளிப் போட்டு கரையை உயர்த்திக் கட்டியதால் இவ்வளவு பெரிய கரை உருவாகிவிட்டது. இதன் உயரம் 15 மீட்டர். அந்தக் கரையின் உச்சியிலே இரண்டு சீன மன்னர்களின் பிரமாண்டமான சிலைகளை இப்போது உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். விஜயலட்சுமி இவை யாருடைய சிலைகள்?


வி......யான் டி, ஹுன் டி என்ற இரண்டு மாபெரும் சீன மன்னர்களின் உருவச் சிலைகள் இவை. இந்த மன்னர்களின் துணிச்சலுக்கும் அளவற்ற ஆற்றலுக்கும் ஒரு சின்னமாக மஞ்சள் நதி கருதப்படுகின்றது.
ரா......கரையோரத்தில் தலைவர் மாவோவின் உருவப்படத்தை பெரிதாக வரைந்து அவருடைய கவிதை ஒன்றை எழுதி வைத்திருக்கிறார்கள். அதை வாசிக்க முடியுமா?