• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-11 17:13:47    
யான் ஸி பற்றி

cri

யான் ஸி ஒரு குள்ளமான மனிதர். நாலடி உயரம் கூட இரக்க மாட்டார். அவர் ச்சு தேசத்திற்குத் தூதராகச் சென்ற போது, அவருக்காக கோட்டை வாசலில் சின்னதாக ஒரு கதவு அமைத்தனர். ஒரு நாய் மட்டுமே அதன் வழியாக நுழைய முடியும். ஆனால் அதன் வழியாக நுழைய யான் ஸி மறுத்து விட்டார்.

"நாய்கள் தேசத்துக்கு வரும் தூதர்தான் நாய்கருக்கான கதவு வழியே நுழைவார். நான் இப்போது ச்சு தேசத்திற்கு தூதராக வந்திருக்கிறேன். நான் இந்த வழியாக நுவைவது பொருத்தம் இல்லை" என்று கூறிவிட்டார். எனவே, பெரிய கதவைத் திறந்துவிட்டு அவரை மரியாதையாக நகருக்குள் அழைத்து வந்தனர்.

மன்னரின் முன்னால் போய் நின்றதும் ச்சு தேசத்து மன்னன் செத்தாளமாக சிரித்தபடியே, "என்னய்யா உங்க தேசத்துல வேற ஆளே கிடைக்கலியா? உங்களைப் போய் தூதரா அனுப்பியிருக்காங்களே" என்று கேட்டான். அதற்கு யான் ஸி மிகவும் பணிவாகப் பதில் சொன்னார்.

"அரசே! எங்களுடைய ச்சி தேசத்தின் தலைநகர் லின்சி. அங்கே ஏழாயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் மேலாடையைக் கழற்றி விரித்துப் பிடித்தால் சூரியன் மறைந்து விடுவான். ஒவ்வொருவரும் நெற்றியில் வழியும் வியர்வையை வழித்து உதறினால் மழை பெய்வது போலிருக்கும். வீதிகளில் மக்கள் நடக்கும் போது ஒருவரை ஒருவர் தோளோடு தோள் உரசித்தான் நடக்கணும். அப்படி நடக்கும் போது ஒருவரை ஒருவர் மிதித்துக் கொள்வார்கள். அப்படி இருக்க, எங்க ச்சி தேசத்துல யாருமே இல்லை என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்?"என்று கேட்டார் யான் ஸி.

"அப்படியானால் உங்களை ஏன் தூதரா அனுப்பணும்" என்றான் மன்னன்.

"எங்களுடைய ச்சி தேசத்துல தூதர்களை அனுப்பும் போது எந்த நாட்டுக்கு அனுப்புகிறோம் என்பதைத் தான் முதலில் பார்க்கிறார்கள். கெட்டிக்கார மன்னர்கள் ஆளும் தேசத்திற்கு கெட்டிக்கார மனிதர்களை தூதர்களாக அனுப்புகிறார்கள். தகுதியற்ற மன்னர் ஆளும் தேசத்திற்கு தகுதியற்ற மிகவும் சாதாரண ஆளை அனுப்புகிறார்கள். நான் ச்சி தேசத்தில் உள்ள தகுதி இல்லாத சாதாரண மனிதன். அதனால் தான் என்னை உங்களுடைய ச்சு தேசத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள்" என்று யான் ஸி கூறியதும் ச்சு தேசத்து மன்னன் வாயடைத்துப் போனான்.