இதுவரை, திபெத்தில் சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் விவசாயிகளும் ஆயர்களும் சிறப்பியல்புடைய வேளாண் துறையின் திட்டப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். திபெத்தின் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிமுறையாக, சிறப்பியல்புடைய வேளாண் துறை மாறியுள்ளது என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தைச் சேர்ந்த வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பு பணியகத்தின் புள்ளிவிபரங்கள் காட்டியுள்ளன.
இந்தச் சிறப்பியல்பு வேளாண் துறை திட்டப்பணிகளில், மாசுப்படாத காய்கறிகள், தரமிக்க ஆடுமாடு வளர்ப்பு தொழில் முதலியவை இடம்பெறுகின்றன. இதில் பெரும்பாலனவை, குறிப்பிடத்தக்க அளவான தொழில் துறை தளங்களாக உருவாகி வருகின்றன.
|