• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-12 14:25:50    
92 வயது முனைவர்

cri
ஆஸ்திரேலியாவில், 92வயது ரூன் பிச்சி என்பவர்,அண்மையில் ஒரு மாநிலத்தின் பல்கலைக்கழக பொறியியல் முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றார். உலகில் வயது கூடுதலான முனைவராக அவர் திகழ்கின்றார்.

1932ஆம் ஆண்டிலேயே, அவர் பொறியியல் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1949ல்,முதுகலைப் பட்டம் பெற்றார். சுமார் அரை நூற்றாண்டுக்குப் பின் அவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். கல்வியறிவு கற்றுக்கொள்வதற்கு எல்லை இல்லை. தாம் வயது கூடுதலாக இருந்த போதிலும், கல்வியறிவு கற்றுக்கொளவதில் தொடர்ந்து மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாகப் பட்டமளிப்பு விழாவில் அவர் தெரிவித்தார். உயிருடன் இருக்கும் வரை கல்வியறிவு கற்றுக்கொள்வதென்ற உண்மையை அவர் தமது நடைமுறையால் நிரூபித்திருக்கின்றார்.

பாரசூட் மூலம் குதித்த முதியோர்

76 வயது யுவெய்ச்சி என்பவர், யூகோஸ்லாவிய ஒன்றியப் படையின் பாரசூட் படைப் பிறிகெட்டின் தளபதியாக விளங்கினார். அண்மையில் அவர் மீண்டும் பாரசூட் மூலம் குதித்தார். இது, 717 முறையாகும். செர்வியாவின் நடுப்பகுதியிலுள்ள ஒரு விமான நிலையத்தில், பாரசூட் படையினர் ஆடையையும் பாரசூட் தொப்பியையும் அணிந்துகொண்ட அவர், யூகோஸ்லாவியாவால் தயாரிக்கப்பட்ட விமானத்தில் ஏறி, மேலை நோக்கிச் சென்றார். இவ்விமானம் குறிப்பிட்ட உயரத்தில் பறந்து, தரையிலுள்ள தொடர்புடைய வாரியத்துடன் தொடர்பு கொண்ட பின், யுவெய்ச்சி, விமானத்தின் கதவைத் திறந்துவிட்டு பாரசூட் மூலம் குதிக்கத் துவங்கினார். அப்போது, ஒரு பாரசூட் வீரரும் அவரைப் பின்பற்றி பாரசூட் மூலம் குதித்ததோடு, ஒளிப்பதிவுக் கருவியால், இந்த முழு போக்கையும் படம் பிடித்தார். முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இடத்திலிருந்து 1.2 மீட்டர் தொலைவில் யுவெய்ச்சி, நிதானமாக தரை இறங்கினார். பாரசூட் மூலம் குதிக்க விரும்பும் யுவெய்ச்சி, படையிலிருந்து விலகிய பின் ஆண்டுதோறும் சில முறை பாரசூட் மூலம் குதிப்பதுண்டு. அடுத்த ஆண்டு தொடர்ந்து பாரசூட் மூலம் குதிக்கத் திட்டமிடுவதாக இம்முறை வெற்றி பெற்ற யுவெய்ச்சி தெரிவித்தார்.