• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-12 15:24:55    
ஹோங் யா தூங்

cri

தற்போது, பயணிகள், கப்பல் மூலம், ஹோங் யா தூங்கிற்கு வசதியாக செல்லலாம். முதல் மாடியிலுள்ள சுற்றுலா மண்டபத்தில், மின் தூக்கி மூலம், இம்மண்டலத்தின் உச்சி மாடிக்கு நேரடியாக போகலாம்.
11வது மாடியிலுள்ள 7 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுடைய நகர காட்சி பார்வை இடத்தில், சுவாங் சிங்கின் ஆற்று கரை பாதையின் காட்சியைப் பார்த்து ரசிக்கலாம். கல் படிக்கட்டுகள் மூலம் கீழே இறங்கினால், ஒரு சிறிய வீதி அடையலாம். இது, ஹோங் யா தூங் நாட்டுப்புற பழக்க வழக்க மண்டலத்தில் வெளிநாட்டு மணம் கமழும் வீதியாகும்.

 
தென் அமெரிக்காவின் பளிங்கு, இந்தியனின் முக மூடி, துருக்கியின் கம்பளம், ஆஸ்திரேலியாவின் தோல், ஜப்பான் மற்றும் தென்கொரியாவின் பொம்மை முதலிய பொருட்களை பயணிகள் பார்த்து வாங்கி, பல்வேறு நாடுகளின் வேறுபட்ட பண்பாட்டை உணர்ந்து கொள்கின்றனர். இவ்வீதியில், சுவாங் சிங்கின் பல்வேறு சுவையான சிற்றுண்டிகள் உள்ளன. சுவாங் சிங்கின் XIAO TIAN E சுற்றுலா தொழில் நிறுவனத்தின் தலைமை மேலாளர் லீயு சியுன் கூறியதாவது:

 
உணவு, உறையுள், போக்குவரத்து, பொழுதுப்போக்கு, நுகர்வு முதலியவை, சுற்றுலாவுக்கான முக்கிய காரணிகளாகும். எமது ஹோங் யா தூங்கில், பயணிகள் மெதுவாக உணர்ந்து கொண்டு, உணவு சுவைத்து, பொருட்களை வாங்கி செய்யலாம்.
பல்வகை சுவையான உணவுப் பொருட்களைச் சுவைத்துப்பார்ப்பது, இவ்வீதியில், குறிப்பிடத்தக்க சிறப்பாகும். பெய்ஜிங்கின் QUAN JU DE வாத்து, ஷாங்காயின் உள்ளூர் வறுவல், ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பல்வேறு உணவுப் பொருட்கள் நிறைய உள்ளன.
ஹோங் யா தூங் காட்சி மண்டலத்தின் மற்றொரு வீதி, BA YU பாணி வீதி எனப்படுகிறது. இவ்வீதியில், பாரம்பரிய பட்டுத்துணிக் கடை, கைவினை தேனீர் கடை ஆகியவை காணப்படலாம்.

 
இவ்விரு வான் வீதிகளில், சிசுவான் இசை நாடகத்தில் மிகவும் தனிச்சிறப்பியல்பான முக மாற்றம், நாட்டுப்புற வித்தை உள்ளிட்ட நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். இவ்விரு வீதிகள், உள்ளூர் விளைப்பொருட்கள் செறிந்து கிடக்கும் இடங்களாகும். பயணிகள், CHONG QINGகின் சிறப்பியல்பு வாய்ந்த பொருட்களையும், சுற்றுலா நினைவுப் பொருட்களையும் வாங்குவதோடு, உள்ளூர் நேர்த்தியான கை எழுத்துத் திறம் படைத்தவர்கள் மற்றும் ஓவியர்களின் படைப்புகளையும் பார்த்து ரசித்து வாங்க முடியும். இரவில், 50 ஆயிரம் வண்ண விளக்குகளால், ஹோங் யா தூங்கிலுள்ள தொங்கு வீடுத் தொகுதி, மிகவும் அழகான இடமாக அலங்கரிக்கப்படுகின்றது. அப்பொழுது, ஆற்று கரையோர மதுவக வீதி, குவிமையமாக மாறுகின்றது.
இம்மதுவக வீதியில், தனித்துவம் மிக்க மதுவகங்கள் பல உள்ளன.

கடல்கொள்ளைகாரன் மதுவகம், இவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இம்மது வகம், கடல்கொள்ளைக் கப்பலிலுள்ள காட்சியைக் கொண்டு, அலங்கரிக்கப்பட்டது. சுற்றுச் சுவரில், நீலமான கடல் பின்னணியும், கூரையில் பிரகாசமான கரிப்பீயன் வானமும் காணப்படலாம். மது வகப் பண்பாட்டைத் தவிர, இவ்வீதியிலுள்ள மக்களின் இரவு வாழ்க்கை மூலம், பயணிகள், பண்டைக்கால வாழ்க்கை முறையை உணர்த்தலாம்.
இரவில், CHONG QINGகின் பல நாட்டுப்புற கலைஞர்கள் ஒன்று திரண்டு, இங்கு அரங்கேறினர். பயணிகள் இங்கு CHONG QINGகின் பல்வேறு உள்ளூர் பண்பாட்டை உணர்ந்து கொள்கின்றனர்.
உலகளவில் மிகவும் பெரிய செங்குத்தான பாறை நகரம் என்ற சான்றிதழைப் பெற, ஹோங் யா தூங் நாட்டுப்புற பழக்க வழக்க மண்டலம், கின்னஸ் தலைமையகத்துக்கு அதிகாரப்பூர்வமாக விண்ணப்பத்தை ஒப்படைத்துள்ளது என்று தெரிகிறது.